Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தலைசுற்ற வைக்கும் இந்தியாவில் இன்றும் பின்பற்றப்படும் மோசமான திருமண மரபுகள்... இப்டிலாமா பண்ணுவாங்க!
இந்திய திருமணங்கள் அவை நடைபெறும் இடத்திற்கும், மாநிலத்திற்கும் ஏற்ப பலவேறு மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது.
இந்தியா பல கலாச்சார நாடு மற்றும் பல மொழிகள், மதம் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகும். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இருப்பது நமது நாட்டின் திருமண முறைகள்தான். இந்திய திருமணங்களில் நிறைந்திருக்கும் உணர்ச்சிபூர்வமான சடங்குகளும் அதன் ஆடம்பரங்களும் உலகம் முழுவதும் பிரபலமானவை.

இந்திய திருமணங்கள் அவை நடைபெறும் இடத்திற்கும், மாநிலத்திற்கும் ஏற்ப பலவேறு மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த சடங்குகள் மற்றும் மரபுகள் திருமண பந்தத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால் இந்த சடங்குகளில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், முகம் சுளிக்க வைப்பதாகவும் இருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த பதிவில் இந்தியாவில் இன்றளவும் பின்பற்றப்படும் திருமண மரபுகள் என்னவென்று பார்க்கலாம்.

பெற்றோர்கள் இல்லாத திருமணம்
திருமணம் பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்ததால்தான் பூரணத்துவம் அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் பாரம்பரிய பெங்காலி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் தயார் கண்டிப்பாக கலந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தாயின் இருப்பு அந்த மணமக்களின் வாழ்க்கையில் தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

குஜராத்தி திருமணம்
குஜராத்தி திருமணங்களில் ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அங்கு மணமகனின் கால்கள் பால் மற்றும் தேனினால் அவரது மாமனாரால் கழுவப்படும். இது மதுபர்கா என்று அழைக்கப்படுகிறது, இதில் வித்தியாசமான விஷயம் என்னவெனில் அந்த பாலின் ஒரு பகுதியை மணமகன் குடிக்க வேண்டும்.

உத்திர பிரதேச திருமணம்
உத்திர பிரதேசத்தின் பழங்குடி பகுதியில், மணமகன் ரோஜா அல்லது மல்லிகை பூக்களால் வரவேற்கப்படுவதில்லை, மாறாக மணமகன் மீது தக்காளி வீசப்படுகிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மற்றும் விசித்திரமான சம்பவத்துடன் தொடங்கிய ஒரு உறவு நிச்சயமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான ஆழ்ந்த அன்பில் முடிவடையும் என்பது தக்காளியைத் தூக்கி எறிவதன் பின்னணியில் உள்ள நம்பிக்கையாகும்.

அஸ்ஸாம் திருமணம்
இந்தியாவிலேயே எளிமையான திருமணம் என்றால் அது அஸ்ஸாமின் ரபா பழங்குடியினர் நடத்தும் திருமணம்தான். இங்கு மணமகனும், மணமகளும் மாலைகளை பரிமாறிக்கொள்கிறார்கள், அவ்வாறு பரிமாறிக்கொண்டாள் அவர்கள் திருமணம் ஆனவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

மரத்துடன் திருமணம்
இந்தியாவில் மங்லிக் அல்லது மாங்கல்ய தோஷம் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு மணமகளுக்கு இந்த நிலை இருந்தால் அவர் மனிதனை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு அரச மரம் அல்லது நாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதிலுள்ள அசாதாரண மூடநம்பிக்கை என்னவென்றால் மணமகள் முதலில் மரத்தை மணந்து கொள்ளாவிட்டால் மணமகன் திருமணம் செய்தவுடன் விரைவில் இறந்து விடுவார்.

சமூக புறக்கணிப்பு திருமணம்
ஒரு சில ஆதிவாசி சமூகங்கள் இந்த சடங்கைப் பின்பற்றுகின்றன, அதாவது ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போது, பெண்கள் கணவருடன் ஒரு மறைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படுகிறார்கள், மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு வருடம் கழித்து திருமணத்தை கிராமத்தின் மூத்த உறுப்பினர்கள் அங்கீகரிக்கின்றனர். அதற்கு பிறகே சமூகத்தில் ஒரு பிரமாண்டமான விழா நடைபெற்று திருமணம் கொண்டாடப்படுகிறது.

மணிப்பூரி திருமணம்
பாரம்பரிய மணிப்பூரி திருமணத்தில், மணமகனும், மணமகளும் ஒரு குளத்தில் இரண்டு மீன்களை விடுவிக்கிறார்கள். மீன் ஒன்றாக நகர்ந்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

பீஹாரி திருமணம்
பீஹாரி திருமணங்களில் மணமகளின் திறன்கள் அவரின் புகுந்த வீட்டில் நுழைந்த தருணத்தில் இருந்து சோதிக்கப்படுகின்றன. சடங்கின்படி மாமியார் பெண்ணின் தலையில் நிறைய பானைகளை வைப்பார்கள். அந்த நிலையிலேயே மணமகள் கீழே குனிந்து பெரியவர்களின் ஆசீர்வாதத்தை எடுக்க வேண்டும். இது மிகவும் பயமுறுத்தும் விழா, இது மணமகளின் ஸ்திரத்தன்மையை சோதிக்கிறது மற்றும் அவரது வெற்றி அவரது திருமண வாழ்க்கையில் எவ்வளவு சீரானதாக இருக்கும் என்பதற்கான அறிக்கையாகும்.



Click it and Unblock the Notifications











