For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலையை கேட்டாலே தலைசுற்ற வைக்கும் உலகின் மிகவும் விலையுயர்ந்த உணவுப்பொருட்கள்... ஷாக் ஆகாதீங்க...!

|

பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களின் அடிப்படைத் தேவையும் உணவுதான். உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் பட்டினியாகத்தான் உறங்கச் செல்கின்றனர். விலையுயர்ந்த உணவு என்பது ஒவ்வொரு மக்களின் பார்வைக்கும் மாறுபடும். ஆனால் சில உணவுகள் உண்மையிலேயே மிகவும் விலையுயர்ந்த உணவாக இருக்கும்.

இந்த உணவுப்பொருட்களை சாதாரண மக்கள் வாங்குவது என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும். இந்த உணவுப்பொருட்களின் மிக அதிக விலைக்கு காரணம் அவை அரிதானதாக இருப்பதுடன் அவற்றை விளைவிப்பது கடினமாக இருப்பதும்தான். உலகின் மிக விலையுயர்ந்த உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாட்சுடேக் காளான்கள்

மாட்சுடேக் காளான்கள்

இந்த காளான்கள் மிகவும் அரிதானவை, அவற்றின் விலை இப்போது ஒரு கிலோகிராம் 600 டாலர் வரை விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன்விலை கிட்டதட்ட 45,000 ஆகும். மாட்சுடேக் காளான்கள் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்டவை, ஆனால் அவை பல்வேறு ஆசிய நாடுகளிலும் வளர்கின்றன. இருப்பினும், காளான்கள் வளரக்கூடிய பகுதிகளில் பூச்சிகள் மற்றும் ஆக்கிரமிப்பு மரங்கள் செல்வதால் அதிகம் வளர்வதால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மாட்சுடேக் காளான்களை வளர்ப்பதற்கு வழி இல்லாததால், எதிர்காலத்தில் அவை முற்றிலும் மறைந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.

கோபி லுவக் காபி

கோபி லுவக் காபி

இந்த காபி இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னிந்தியாவில் தொழில்துறை அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. கோபி லுவாக் உலகின் மிக விலையுயர்ந்த காபிக்கொட்டையாகும். இதன் விலை ஒரு கிலோவுக்கு $ 250 முதல் $ 1,200 வரை மாறுபடும். இது வளர்க்கப்படும் சிறப்பான செயல்முறையால் பிரபலமடைந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 89,000 ஆகும்.

வைட் பேர்ல் அல்பினோ கேவியர்

வைட் பேர்ல் அல்பினோ கேவியர்

இந்த கேவியரின் ஒரு கிலோ விலை 9,100 டாலர் ஆகும். அல்பினோ ஸ்டர்ஜன் என்பது காஸ்பியன் கடலில் வாழும் ஒரு வகையான பெரிய மீன். அல்பினோ ஸ்டர்ஜனில் இருந்து முட்டைகள் மிகவும் அரிதாகவே கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதன் காரணமாக கேவியரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு மீன் 100 வயதைக் கடந்த பிறகே இது கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் இந்திய விலை கிட்டதட்ட 7 இலட்சம் ஆகும்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு கஷ்டப்பட்டாவது செஞ்ச சத்தியத்தை காப்பாத்துவாங்களாம்... உங்க ராசி என்ன?

ஸ்வாலோ நெஸ்ட் சூப்

ஸ்வாலோ நெஸ்ட் சூப்

இந்த பறவைகளின் கூடு எந்தவித வெளிப்பொருட்களையும் சேர்க்காமல், முற்றிலும் அவற்றின் உமிழ்நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக அவற்றின் கூடுகள் சீன சமையலில் ஒரு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டன. இதன் அதிக விலைக்கான காரணம் இதனை எடுப்பதில் இருக்கும் ஆபத்துதான். பறவைகள் தங்கள் கூடுகளை ஆபத்தான பாறைகளில் கட்டுகின்றன, அங்கு விழும் ஆபத்து மிக அதிகம். இதன் விலை ஒரு கிலோ 3000 டாலர் ஆகும், இதன் இந்திய மதிப்பு 2 இலட்சத்திற்கும் மேல்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

இந்த சுவையூட்டலின் விலை ஒரு கிலோவுக்கு $ 400 முதல் $ 1,000 வரை இருக்கும். ஏனென்றால், இலையுதிர்காலத்தில் குங்குமப்பூ ஆண்டுக்கு ஏழு நாட்கள் மட்டுமே வளரும். இது கையால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மேலும் வெறும் 1 கிலோ குங்குமப்பூவை சேகரிக்க 300,000 பூக்களை எடுக்க வேண்டியது அவசியம்.

அயாம் செமானி கருப்பு கோழி

அயாம் செமானி கருப்பு கோழி

அயாம் செமனி கோழி இந்தோனேசியாவில் வளர்க்கப்படுகிறது, ஆனால் இது பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என்ற அச்சத்தால் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இந்த கோழி இனம் மிகவும் அரிதானது, இந்தோனேசியாவில் ஒரு கோழிக்குஞ்சின் விலை சுமார் $ 200 ஆகும். நாட்டிற்கு வெளியே, இந்த விலை ஆயிரக்கணக்கான டாலர்களை தாண்டும். இருப்பினும், மலேசியாவில் அயாம் செமானி மிகவும் பொதுவானது, அதன் விலை ஒரு சாதாரண கோழியை விட அதிகமாக இல்லை.

ஜப்பானிய வாக்யு ஸ்டீக்ஸ்

ஜப்பானிய வாக்யு ஸ்டீக்ஸ்

ஜப்பானிய மாட்டிறைச்சியில் இருந்து தயாரிக்கப்படும் வாக்யு ஸ்டீக்ஸ், உலகின் சுவையான மற்றும் மிகவும் விலையுயர்ந்த சுவையாகும். இறைச்சி ஒரு அற்புதமான நறுமணத்தையும், கவர்ச்சிகரமான வெண்ணெய் அமைப்பையும் கொண்டுள்ளது. ஜப்பானில், இறைச்சியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் தூய்மையான வாக்யு காளை-கன்றுகளுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இந்த காளை கன்றுகள் பீர் குடிக்கலாம் மற்றும் இவற்றுக்காக கிளாசிக்கல் இசையை இசைக்கிறார்கள். இந்த வகையான இறைச்சியின் 1 கிலோ விலை $ 450 வரை இருக்கும்.

MOST READ: உங்களுக்கு அடிக்கடி செக்ஸ் கனவுகள் வருவதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சியான காரணங்கள் என்ன தெரியுமா

மூஸ் சீஸ்

மூஸ் சீஸ்

உலகின் மிக விலையுயர்ந்த பாலாடைகளில் ஒன்று மூஸ் சீஸ் ஆகும், இது ஒரே இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது: ஸ்வீடனில் உள்ள மூஸ் ஹவுஸ் பண்ணையில். அதை தயாரிக்க மூஸ் பால் தேவை. மூஸ் சீஸ் வெள்ளை நிறத்தில் உள்ளது, மேலும் அதன் தோற்றம் ஃபெட்டா சீஸ் நினைவூட்டுகிறது. இது ஒரு கிலோவிற்கு சுமார் டாலர் 1,074 வரை விற்கப்படுகிறது. மேலும் இது மிகவும் குறைந்த அளவுகளிலேயே தயாரிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Expensive Food Items in the World

Check out the most expensive food items in the world.
Story first published: Tuesday, November 17, 2020, 11:45 [IST]