Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க
தலைசுற்ற வைக்கும் அந்த கால கொடூரமான பிறப்பு கட்டுப்பாட்டு வழிகள்... அதிர்ச்சியாகாம படிங்க...!
தொழில்நுட்பமும், மருத்துவசதியும் பெருமளவில் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பது எளிதானதாக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் இது மிகவும் சவாலானதாக இருந்தது.
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பது என்பது தற்போதைய காலத்தைப் போலவே பண்டைய காலத்திலும் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. தொழில்நுட்பமும், மருத்துவசதியும் பெருமளவில் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பது எளிதானதாக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் இது மிகவும் சவாலானதாக இருந்தது.

அனைத்து வரலாற்று விஷயங்களைப் போலவே, பிறப்பு கட்டுப்பாடும் சில கொடூரமான மற்றும் அருவருப்பான விஷயங்களைக் கண்டது. யோனிக்குள் லீச்ச்களை அடைப்பது முதல் எர்காட்டை உண்டாக்கும் சைக்கோசிஸை உட்கொள்வது வரை கடந்த காலத்தில் மக்கள் அனைவருரையும் முயற்சித்தனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

லைசோல் கிளீனிங் ஏஜென்டைப் பயன்படுத்துதல்
1900 களின் முற்பகுதியில், லைசோலை விந்தணுக் கொல்லியாகப் பயன்படுத்த பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இப்போது, லைசோல் ஒரு வீட்டு சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு பொருள் மட்டும்தான். அடிப்படையில், இது யோனிக்கு அருகில் செல்லவேக்கூடாது. இது பிறப்பு கட்டுப்பாட்டு ரேடார் எடுக்கப்படுவதற்கு முன்பு சில மருத்துவ விளைவுகளுக்கும் சில இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது.

ஓபியம் இடைத்திரை
ஆரம்ப காலங்களில், பெண்கள் கர்ப்பத்தைத் தடுக்க ஓபியம் கொண்ட இடைத்திரையைப் பயன்படுத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக இதனால் பெண்கள் அதிகளவு போதைக்கு ஆளாகினர் மற்றும் இந்த முறை வேலை செய்யவில்லை.

பிறப்புறுப்பில் அட்டைகளை பயன்படுத்துதல்
இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பிறப்புறுப்பில் அட்டைப்பூச்சிகளை பயன்படுத்தும் இந்த முறை மிகவும் கொடூரமான முறையாக இருந்தது. இடைக்கால கருக்கலைப்பு சட்டங்கள் இந்த கொடூரமான முறைகளை பெண்கள் பயன்படுத்த கட்டயப்படுத்தியது. கட்டாய கருக்கலைப்பு அப்போது பெரிய குற்றமாக கருதப்படவில்லை.

முதலை சாணம் மற்றும் தேன்
பழங்கால எகிப்து பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க முதலை மலம் மற்றும் தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். இந்த முறையில் பெண்களின் பிறப்புறுப்பிற்குள் முதலையின் சாணம் இடைத்திராயாக பயன்படுத்தப்பட்டது. பிறப்பு கட்டுப்பாடு முறைகளிலேயே இது மிகவும் கொடூரமானதாக இருந்தது.

விஷத்தன்மை வாய்ந்த பென்னிராயல் தேநீர்
இந்த கவர்ச்சியான ஊதா செடியால் தயாரிக்கப்பட்ட தேநீரை பெண்கள் மாதவிடாயைத் தூண்டுவதற்கும் கருக்கலைப்பு செய்வதற்கும் குடித்தார்கள்.இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால், இந்த தேநீரின் அதிகப்படியான நச்சுத்தன்மை மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கை பிறப்புறுப்பிற்குள் வைப்பது
கொலம்பியாவில் ஒரு பெண் தனது பிறப்புறுப்பில் ஒரு உருளைக்கிழங்கை செருகினார், அது உண்மையில் 2 வாரங்கள் செருகப்பட்ட பிறகு உள்ளே வேர்களை வளர ஆரம்பித்தது. ஏனென்றால் உருளைக்கிழங்கு கிழங்குகள் இருளில் செழித்து வளரும், ஆனால் இந்த முறை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

பாதரச நீர் அருந்துதல்
பாதரசம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று நாம் அறிவோம், ஆனால் பண்டைய எகிப்து மற்றும் கிரீஸ் இதனை அறியவில்லை. ஏனெனில் அவர்கள் பெண்களின் கர்ப்பத்தைத் தடுக்க அவர்கள் இதனை குடிக்க வற்புறுத்தினார்கள், மற்றவர்கள் மேக நோய்க்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தினர். இதனால் பல பெண்கள் உயிரிழந்தனர்.

கோட் ஹேங்கர்
DIY கருக்கலைப்பு முறையில் ஹேங்கரின் கொக்கி முனையைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்வது கடந்த காலங்களில் பெண்களால் பயன்படுத்தப்பட்டது. இது மிகவும் பிரபலமான முறையாக இடைக்காலத்தில் இருந்தது. ஆனால் பல மோசமான விளைவுகளுக்கு இது வழிவகுத்தது.

பனிக்கட்டியில் படுப்பது
பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பனிக்கட்டிகளில் படுத்துக் கொள்வதன் மூலம் தாழ்வெப்பநிலையைத் தூண்டுவார்கள், மேலும் இது எப்படியாவது கருக்கலைப்பை ஏற்படுத்தும். இது மரணத்தை விளைவிக்கும் என்பது நாம் நன்கு அறிந்ததே. ஆனால் கடந்த கால மக்கள் இதனை உணராமல் இருந்தனர்.



Click it and Unblock the Notifications











