Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
சாஸ்திரத்தின் படி இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்களை வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் துரத்துமாம்...!
அனைவருக்குமே வாழ்க்கையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை.
அனைவருக்குமே வாழ்க்கையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. இவ்வளவு கடினமாக உழைத்த போதிலும், சில சமயங்களில் நீங்கள் விரும்பிய செல்வத்தைப் பெறத் ஏன் தவறுகிறீர்கள் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

சிலசமயம் நீங்கள் செலவழிப்பதில் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் உங்கள் கையில் பணமே தங்காத சூழ்நிலை ஏற்படலாம். இதற்கு காரணம் உங்களின் பழக்கவழக்கம் மட்டுமல்ல உங்களின் விதியும் கூடத்தான். நமது விதியை நமக்கு உணர்த்தும் சில அடையாளங்கள் நம் உடலில் பிறக்கும்போதே வைக்கப்படுவதாக நமது முன்னோர்களும், வேதங்களும் கூறியுள்ளது.

சாமுத்ரிகா சாஸ்திரம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மச்சம் இருப்பவர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவிர்க்க முடியாத செலவுகளால் அவதிப்படுவதால் அவர்கள் விரும்பிய செல்வத்தை வாழ்க்கையில் பெறவே முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் கையில் பணம் தங்காது, வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்வார்கள்.

இடது கன்னத்தில் மச்சம்
குறிப்பாக இடது கன்னத்தில் மச்சம் இருப்பது ஒருவர் மிகப்பெரிய வருமான ஆதாரத்தைக் கொண்டிருப்பார் என்பதற்கான அறிகுறியாகும், ஆனால் போதுமான சேமிப்பைக் கொண்டிருக்கத் தவறிவிடுவார். இவரின் வருமானம் அனைத்தும் செலவிற்கே சரியாக போய்விடும்.

உதட்டிற்கு கீழ் மச்சம்
உதட்டில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டம் என்பார்கள், ஆனால் அது மேல் உதட்டில் இருக்க வேண்டும். கீழ் உதட்டில் மச்சம் இருப்பது துரதிர்ஷ்டமாகும். உதடுகளுக்குக் கீழே மச்சம் இருப்பது ஒருவர் பெரும்பாலும் பண நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கான அறிகுறியாகும்.

இடது உள்ளங்கையில் மச்சம்
இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் இருப்பது ஒருவர் இளமைக்காலத்தில் கடுமையான பணத்தைக் கையாளும் நெருக்கடியை சந்திக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இவர்கள் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாததால் இது ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது கடினம்.

இடது காலில் மச்சம்
இடது காலில் மச்சம் இருப்பவர்கள் விவரிக்க முடியாத காரணமே இல்லாத செலவினங்களை அனுபவிப்பார்கள். இவர்கள் சேமிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், இறுதியில் அது அனைத்தும் வீண் செலவாக மாறும்.

ஆள்க்காட்டி விரலில் மச்சம்
ஒருவரின் ஆள்காட்டி விரலின் உட்புறத்தில் மச்சம் இருப்பது அவர் பணம் தொடர்பான பிரச்சினைகளை வாழ்நாள் தாங்க வேண்டியிருக்கும் என்பதற்கான அறிகுறியாகும். சில காலக்கட்டத்தில் அவர்கள் உணவிற்கே சிரமப்படும் நிலை ஏற்படலாம்.

சுக்கிர மேட்டில் மச்சம்
ஒருவரின் சுக்கிரன் மேட்டில் கூர்மையான மற்றும் அடர்த்தியான மச்சம் இருப்பது அவரின் கடினமான காலங்களில் அவர் கைகளில் பணம் தங்காது என்பதன் அறிகுறியாகும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவக்கூடிய நபர்களுடன் நல்லுறவு கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்வார்கள்.

இடது புருவத்தில் மச்சம்
ஒருவர் புருவத்தின் வளர்ச்சியின் பின்னால் மச்சம் மறைக்கப்பட்டிருந்தால் அல்லது அதற்கு சற்று மேலே இருந்தால், அது அந்த நபருக்கு பாலியல் இன்பத்திற்கான பலவீனம் இருப்பதற்கான அறிகுறியாகும், மேலும் முக்கியமான விஷயங்களுக்கு அவர்கள் எப்போதும் பண நெருக்கடியைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இன்பத்திற்காக பேராசை கொள்கிறார்கள், எந்த நேரத்திலும் அவர்கள் திவாலாகிப் போவதைக் காண்பார்கள்.

இடது அக்குளில் மச்சம்
உடலின் இந்த பகுதியில் மோல் உள்ளவர்கள், அவர்களின் உடல்நலம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் பணத்தின் பெரும்பகுதி நோய்கள் மற்றும் வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வடிகட்டப்படும்.



Click it and Unblock the Notifications