Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம்
Budh Gochar 2022: புதன் பெயர்ச்சியால் ஏப்ரல் 25 முதல் எந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப் போகுது தெரியுமா?
தன் ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கட்கிழமை மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறது. பின் இந்த ராசியில் இருந்து மே 10 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகரும்.

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன், எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும். ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்புவதோடு, மோசமாக கையாளுவார்கள். இப்படிப்பட்ட புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கட்கிழமை மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறது. பின் இந்த ராசியில் இருந்து மே 10 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகரும். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெற போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நிதி ரீதியாக உங்களால் அதிகம் சேமிக்க முடியாது. எந்த ஒரு ஒப்பந்தத்தையும் கையெழுத்திடும் போதும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் நேரத்தை திறம்பட பயன்படுத்துவீர்கள். ஒரு இசைக்கலைஞராக அல்லது மனநல ஆலோசகராக இருக்க இது ஒரு நல்ல நேரம். உறவில் இருப்பவர்கள், தங்கள் துணையுடன் நேரத்தை செலவிட்டு உங்கள் பிணைப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் வாழ்க்கை துணையிடம் எதற்கும் கட்டளையிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உறவை மோசமாக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். ஆகவே பணிபுரிபவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபகரமான காலமாக இருக்கும். ஒரு புதிய வீட்டைக் கட்ட விரும்பினால் அல்லது உங்கள் தற்போதைய வீட்டை மறுவடிவமைக்க விரும்பினால், அதை செய்ய இது சிறந்த நேரம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது எளிதில் விரக்தியடைவார்கள். நிதியைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்களின் பணி வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். சிறு தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். இக்காலத்தில் எந்த புதிய திட்டங்களையும் தொடங்காதீர்கள். உங்கள் உறவுகளை அமைதியாகவும் இணக்கமாகவும் வைத்திருக்க, உங்களின் கோபத்தையும் விரோதத்தையும் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். புதிய நபர்கள் இக்காலத்தி சந்திப்பீர்கள். பணியிடத்தில் இருக்கும் நண்பர்களும் பெரியவர்களும் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ஆதாரமாக இருப்பீர்கள். பணிபுரிபவர்களின் வருமானம் உயரும். அதோடு பதவி உயர்வும் பெற வாய்ப்புள்ளது. குறுகிய கால மற்றும் நீண்ட கால வாய்ப்புகளில் முதலீடு செய்வது உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அற்புதமான யோசனைகளின் விளைவாக நீங்கள் மிகவும் அமைதியான இல்லற வாழ்க்கையைப் பெறுவீர்கள். உங்கள் திருமணத்தில் சில நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள், மேலும் நீங்களும் உங்கள் துணையும் சிறந்த இணக்கத்துடன் இருப்பீர்கள். வேலையில் உங்களை நிலைநிறுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால் இக்காலம் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருக்கும். இதன் விளைவாக, உங்கள் வேலையை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல தருணம்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் நடத்தையால் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் செலவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ப வருமானமும் இருக்கும். இக்காலத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மதித்து அவர்களை நெருக்கமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். எம்.என்.சி கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்மை பயக்கும். சிலர் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். எதிர்பாராத பணப் பலன்கள் கிடைத்தாலும், வருமானம் சீரற்றதாக இருக்கும். சிலருக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அது விரைவில் முடிவுக்கு வரும். பெற்றோரிடம் வாக்குவாதத்தை தவிர்த்திடுங்கள். பரம்பரை நிலம் தொடர்பாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் சில ஈகோ பிரச்சனைகள் ஏற்படலாம். சொந்த விஷயங்களில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல மரியாதையையும் புகழையும் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க இது ஒரு சிறந்த தருணம்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வேலையில் நீங்கள் வெற்றியடைவீர்கள். நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் சிலர் பதவி உயர்வு பெறலாம். உறவுகள் சுமூகமாக செல்லும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மன நலம்தான் உங்கள் முதல் அக்கறையாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் பணிபுரிபவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்துவார்கள். சில தம்பதிகளுக்கு திருமண வாய்ப்பு அமையும். அதே வேளையில் அன்புக்குரியவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அது உறவை மோசமாக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்ய இது நல்ல காலம். இக்காலத்தில் உங்களின் மாமியார்-மாமனார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் ஆதரவால் நீங்கள் பயனடைவீர்கள். வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும் என்பதால், உங்கள் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அதிக முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே இக்காலத்தில் தங்கள் வேலையை முடிக்க முடியும்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான நிதி முடிவு. ஏனெனில் அது நீண்ட காலத்திற்கு பலன் தரும். நீங்கள் வலுவான தன்னம்பிக்கையையும், கூர்மையான பகுப்பாய்வு மனதையும் கொண்டிருப்பீர்கள். இது மற்றவர்களுடன் உரையாடும் திறனை அதிகரிக்கும். தம்பதிகள் தங்களுடைய உறவுகளை வளர்த்துக் கொள்ள ஒன்றாக நேரத்தை செலவிட வேண்டும். இக்காலத்தில் உங்கள் வழியில் வரும் எந்தவொரு துன்பத்தையும் நீங்கள் சகிப்புத்தன்மையுடன் சமாளிப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
