Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
Budh Gochar March 2023 Effects: புதன் பெயர்ச்சியால் மார்ச் 16 முதல் இந்த ராசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்!
புதன் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்மதனமானார். இந்நிலையில் 2023 மார்ச் 16 ஆம் தேதி, அதாவது இன்று அஸ்தமன நிலையில் புதன் மீன ராசிக்கு நுழைகிறார்.
Mercury Transit In Pisces on 16 March 2023: ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, கற்கும் திறன் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்மதனமானார். இந்நிலையில் 2023 மார்ச் 16 ஆம் தேதி, அதாவது இன்று அஸ்தமன நிலையில் புதன் மீன ராசிக்கு நுழைகிறார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, பலவீனமாக இருப்பதோடு, அது வழங்கும் நற்பலன்கள் தடைபடும். எனவே மீன ராசியில் அஸ்தமன நிலையில் வந்துள்ள புதனால் நற்பலன்களை விட கெடுபலன்கள் அதிகம் கிடைக்கும்.

இது தவிர மீன ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் குரு பயணித்து வருவதால், புதன் நுழையும் போது, அந்த மீன ராசியில் திரிகிரக யோகமும், புதாதித்ய யோகமும் உருவாகிறது. இப்போது மீன ராசிக்கு புதன் செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும். உங்களின் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வியாபாரிகளுக்கு சற்று சுமாராகவே இருக்கும். பிரச்சனைகளைக் குறைக்க புதன்கிழமைகளில் விநாயகரை வழிபட வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக நற்பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பட்ஜெட்டிற்குள் செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் நற்பலன்களை வழங்குவார். குறிபபாக வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோசனைகள் தோன்றும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு புதன் அதிக நற்பலனைத் தரமாட்டார். இக்காலத்தில் தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். இதனால் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் ரீதியாக, இக்காலம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. நிதி நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக சளி, காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் உறவினர்களுடனான உறவுகள் மோசமடைய வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் நற்பலன்களை வழங்குவார். தொழில் ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலமானது தனுசு ராசிக்காரர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இக்காலத்தில் தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்வீர்கள். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சற்று பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். கல்வி மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடனான உறவு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் இந்த ராசிக்கார மாணவர்களின் தன்னம்பிக்கை சற்று குறையக்கூடும். புதனால் சந்திக்கும் பாதகமான விளைவுகளைக் குறைக்க, தினமும் துளசி செடிக்கு நீரை விடுவதோடு, துளசி நீரைக் குடித்து வாருங்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களைப் பெறுவார்கள். தொழிலை விரிவுப்படுத்தும் எண்ணம் இக்காலத்தில் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். திருமணமாகாதவர்களுக்கு புதிய வரன் கிடைக்கலாம். இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் நன்கு யோசித்த பின்னர் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications