Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
புதன் கும்ப ராசிக்கு செல்வதால் அடுத்த 18 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் மோசமா இருக்கப்போகுது...
நவகிரகங்களில் புதனின் பலன்கள் அது எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. புதன் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு காலை 11.31 மணியளவில் இடம் பெயர்கிறார்.
புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் புதனின் பலன்கள் அது எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒருவரது ராசியில் புதன் தவறான நிலையில் இருந்தால், அது அந்த ராசிக்காரர்களை பதற்றமாக வைத்திருப்பதுடன், எதையும் மோசமான அணுகுமுறையுடன் கையாள வைக்கும்.

இத்தகைய புதன் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு காலை 11.31 மணியளவில் இடம் பெயர்கிறார். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை நிறைந்திருப்பார்கள். பேசும் போது சமநிலையை பேணுங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். மன அமைதி இருந்தாலும், அடிக்கடி எரிச்சலும் ஏற்படும். இக்காலத்தில் இசையில் நாட்டம் அதிகரிக்கும். இதுவரை சேமித்து வைத்த செல்வம், பணம் அனைத்தும் குறையும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மன அமைதியைப் பெற முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஒரு நல்ல மாற்றத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நல்ல நிலையில் இருப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கை நிலை வேதனை நிறைந்ததாக இருக்கும். நண்பர்களின் ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான யோகம் உருவாகும். தினசரி செயல்பாடுகளில் இடையூறுகளை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நம்பிக்கை குறையும். தேவையில்லாத கோபத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கலாம். இக்காலத்தில் சுயமாக இருங்கள். உங்கள் சகோதரரின் உதவியால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் உருவாகும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நண்பரின் உதவியால் வேலை மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நண்பர்களின்ஆதரவு கிடைக்கும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்த்திடுங்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் முடிவடையும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பண வரவிற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் மனம் அமைதியிழந்து இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோரிடம் இருந்து பணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிருப்தியான உணர்வுகள் மனதில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் எழும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் அறிவுசார் வேலைகளில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லலாம். இக்காலத்தில் தன்னம்பிக்கையுடன் இருங்கள். எதிலும் அதிக ஆர்வத்துடன் இருப்பதைத் தவிர்த்திடுங்கள். தாயாரிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிகப்படியான செலவுகளால் சிரமப்படுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உருவாகும். நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வருமானத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சேமித்து வைத்த செல்வம் குறையும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதிகப்படியான கோபத்தைத் தவிர்த்திடுங்கள். உங்கள் வாழ்க்கை சற்று அசௌகரியமாக இருக்கும். இக்காலத்தில் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வியாபாரம் விரிவடையும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களின் பொறுமை குறையும். பயணத்தில் சிரமங்களை சந்திக்கக்கூடும். நல்ல சுவையான உணவுகளை உண்ணத் தோன்றும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். மேலும் சற்று பிடிவாதமாகவும் இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications