Latest Updates
-
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்!
கும்பம் செல்லும் புதனால் பிப்ரவரி 27 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமா இருக்கப் போகுது...
புத்திகாரகனான புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கும்ப ராசியில் புதன் மார்ச் 15 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். இந்த ராசி மாற்றத்தின் போது, அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் கெடுபலனையும் பெறலாம். அந்த வகையில் புத்திகாரகனான புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கும்ப ராசியில் புதன் மார்ச் 15 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார்.

சனி ஆளும் கும்ப ராசிக்கு புதன் செல்லும் போது, அதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவதோடு, அனைத்து விஷயங்களிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, வெற்றியைக் காண்பார்கள். இப்போது கும்பம் செல்லும் புதனால் நற்பலனைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களைத் தேடி பணம் அதிகம் வரும். பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வணிகர்கள் இக்காலத்தில் பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இதுவரை முதலீடுகளை செய்து வந்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் பெயரில் வியாபாரத்தை தொடங்கியிருந்தால், இக்காலத்தில் அதில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்ய சிறந்த காலம் இது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள் வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரத்தில் விரிவாக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். முக்கியமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மொத்தத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications