புதன் வக்ர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

புதன் 2022 ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிலை கொண்டு மாலை 04:42 மணிக்கு நுழைகிறார். இந்த ராசியில் 04 பிப்ரவரி 2022, காலை 9:16 மணி வரை பிற்போக்கு நிலை/வக்ர நிலையில் இருப்பார்.

Mercury Retrograde in Capricorn On 14 January 2022 Effects on Zodiac Signs in Tamil

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் ஒருவரது புத்தி, அறிவு, உணர்வு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றையும் குறிக்கிறது. இத்தகைய புதன் 2022 ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிலை கொண்டு மாலை 04:42 மணிக்கு நுழைகிறார். இந்த ராசியில் 04 பிப்ரவரி 2022, காலை 9:16 மணி வரை பிற்போக்கு நிலை/வக்ர நிலையில் இருப்பார். வக்ரமாகும் புதனின் இந்த பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன. பொதுவாக புதனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இப்போது மகர ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இக்காலம் உங்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான காலமாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் பழகும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் தவறான வார்த்தைகள் அல்லது நடத்தையால் பிரச்சனைகள் ஏற்படலாம். இக்காலத்தில் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விக்கான பதிலை இக்காலத்தில் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான சில வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் வேலை அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்கக்கூடாது. உங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். ஆகவே இக்காலத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால், அது இக்காலத்தில் குணமாகும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் படைப்பற்றால் இக்காலத்தில் பிரகாசிக்காமல் போகலாம். எந்த ஒரு ஆவணங்களையும் கவனமாக படித்து பாருங்கள். ஏனெனில் இக்காலத்தில் சில ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் எழலாம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட இது நல்ல நேரம் அல்ல. உறவுகள் இக்காலத்தில் நன்கு வளரும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இக்காலமானது எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க சிறந்த காலம். பணியிடத்தில் அல்லது வாழ்க்கைத் துணையுடன் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் உங்களின் தொடர்பு வலுவாக இருந்தால், அதை எளிதில் தீர்த்துவிடுவீர்கள். வணிகர்கள் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இக்காலத்தில் சில சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். இக்காலத்தில் சில குழப்பங்களுடன் இருப்பீர்கள். தொடர்பு இடைவெளி உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கும். இக்காலத்தில் அமைதியாக இருங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆகவே ஆரோக்கியமாக இருக்க நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் மற்றும் உடற்பயிற்சியை செய்யுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்த மாணவர்கள் பதற்றமாக இருக்கக்கூடும். படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். எனவே இக்காலத்தில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உறவில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரிகள் ஆவேசமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் வீட்டில் சில சீரமைப்புக்களை செய்வீர்கள். எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன்பும், நன்கு ஆராய்ந்து பின் செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். உங்கள் பெற்றோருக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். இக்காலத்தில் வீட்டுப் பொருட்களுக்கு சில தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இக்காலத்தில் சில பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். ஆனால் அது ஒத்தி வைக்கப்படலாம். இக்காலத்தில் நீங்கள் உங்களின் சில முக்கியமான ஆவணங்களை இழக்க நேரிடலாம் என்பதால் அவற்றின் நகல்களை எடுத்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உடன்பிறப்புகள் உங்களை உதவிக்கு அழைக்கலாம். இக்காலத்தில் நீங்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இக்காலத்தில் முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருங்கள். மனக்கிளர்ச்சியுடன் இருப்பது உங்கள் பணத்தை இழக்க வைக்கும். மேலும் மோதல்கள் மற்றும் தவறான புரிதல்களிலிருந்து விலகி இருங்கள். உங்கள் வரிகளை நேரத்திற்கு முன்பே செலுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் திட்டங்களைச் சரிபார்க்க நீங்கள் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நேரம் உங்கள் ஆளுமையை பிரதிபலிக்க உதவும். இருப்பினும், பழகும் போது, உங்கள் நிலை மற்றும் மரியாதை குறித்து கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இக்காலத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் விஷயமாக பயணத்தை மேற்கொண்டால், அது நல்ல லாபத்தை தரும். எந்த ஒரு விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. நீங்கள் ஒரு நீண்ட பயணம் அல்லது பயணத்திற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அந்த திட்டத்தை இப்போதைக்கு நிறுத்தி வைக்கவும். நீங்கள் நோய்வாய்ப்பட்டால், நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் நிதி நிலைமையில் சில சரிவுகள் இருக்கும். இதற்கு உங்கள் திடீர் முடிவுகள் காரணமாக இருக்கலாம். இந்த நேரத்தில் மாணவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் நீங்கள் அமைதியாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும். மேலும் எதையும் ஏற்றுக்கொள்வது உங்கள் நிலையான வாழ்க்கைக்கு முக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, January 12, 2022, 15:24 [IST]
Desktop Bottom Promotion