Just In
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணம் சாதகமாக அமையும்...
- 12 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 13 hrs ago
பெண்களே! உங்க முன்னாள் காதலன் மீண்டும் உங்கள காதலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 13 hrs ago
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Finance
ஹெச்டிஎஃப்சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனம் ஹெச்டிஎஃப்சி இணைப்பு.. அடுத்தது என்ன?
- News
மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. மழை நீரில் மிதக்கும் மும்பை.. பொதுமக்கள் அவதி.. இதுவரை 3,500 பேர் மீட்பு
- Technology
ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!
- Movies
ப்பா.. என்னம்மா வில்லா வளையுறாரு வரலக்ஷ்மி சரத்குமார்.. செம ஸ்லிம்மா மாறிட்டாரே.. செம வீடியோ!
- Sports
இரண்டு தவறுகளால் மொத்தமாக போச்சு..தோல்வி குறித்து டிராவிட் கருத்து..சீனியர்களுக்கு மறைமுக எச்சரிக்கை
- Automobiles
சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
புதன் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரங்க ரொம்பவும் உஷாரா இருக்கணும்.. இல்ல இழப்பை சந்திப்பாங்க...
நவகிரகங்களில் புத்திகாரகன் தான் புதன். இந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முடிவுகளை எடுப்பார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் தவறான முடிவுகளால் பல பிரச்சனைகளையும், இழப்பையும் சந்திப்பார்.
இப்படிப்பட்ட புதன் 2021 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து சொந்த ராசியான மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்நிலையில் புதன் மே 30 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிலையில் மாறி, ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசிக்கு வக்ர பெயர்ச்சியாகி, ஜூன் 22 ஆம் தேதி வரை இருந்து முற்போக்கு நிலையில் மாறுகிறார். இறுதியாக ஜூலை 7 ஆம் தேதி முற்போக்கு நிலையில் மீண்டும் மிதுன ராசிக்கே பெயர்ச்சியாகி, அங்கு ஜூலை 25 ஆம் தேதி வரை இருப்பார்.
MOST READ: புதன் மிதுன ராசிக்கு செல்வதால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியான புதனின் வக்ர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
2021 புதன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். பயணத்திற்கான வாய்ப்புள்ளது. பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். வணிகர்களுக்கு இந்த காலம் சாதகமானதாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் உறவை புதுப்பிக்க இது சிறந்த நேரம். தந்தைவழி உறவினர்களுடனான உறவு மேம்படக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் உறவில் நல்லிணக்கத்தை கொண்டிருப்பார்கள்.

ரிஷபம்
2021 புதன் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தலையில் காயம் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் மன அழுத்தத்தை உணரக்கூடும் என்பதால் தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களை செய்யுங்கள். மாணவர்கள் விரக்தி அடைவார்கள். ஆனால் அது தற்காலிகம் தான். உங்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். யாருடனும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். இக்காலத்தில் தூக்கமின்மையை சந்திக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் வர்த்தகம் செய்வது அல்லது கடன் வாங்குவது அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கூட நல்லதல்ல. நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் ஒரு நண்பரிடமிருந்து பயனடைவீர்கள்.

மிதுனம்
2021 புதன் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கலாம். இக்காலத்தில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க முயலுங்கள். ஏனெனில் கண் வலி, குறிப்பாக இடது கண், சளி, இருமல், காய்ச்சல் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்படலாம். கர்ப்பிணிகள் இன்னும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் எந்த ஒரு விஷயத்திற்கும் அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அப்படி எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால், முடிவு எடுப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசுங்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பயணம் சர்ச்சைக்குரியதாக மாறக்கூடும். வணிகர்களுக்கு இது சாதகமான காலம். இக்காலத்தில் செலவுகள் உயரக்கூடும். மாணவர்களுக்கு, விருப்பமான கல்லூரிகளில் அனுமதி பெறுவது இந்த காலத்தில் கடினமாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கலாம். தாய்வழி உறவினர்களுடனான உறவுகள் மன அழுத்தம் நிறைந்ததா இருக்கலாம். பேசும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். கர்ப்பமாக இருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த பிரச்சனையானாலும் மருத்துவரை தவறாமல் அணுக வேண்டும். தொழில் தொடர்பான அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் தொழிலில் ஏதேனும் குழப்பம் இருந்தால், ஒரு நிபுணரை அணுகுவது அறிவுறுத்தப்படுகிறது. தொழில், கல்வி மற்றும் புதிய வேலை தொடர்பான பல வாய்ப்புகளைப் பெறலாம். இக்காலத்தில் பணத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். வணிக உறவுகள் நன்றாக இருக்கும். மோசடிக்கான வாய்ப்புகள் இருப்பதால், எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்யாமல் கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவிக்கலாம். உங்களுக்கு யாராவது வழிகாட்ட முயற்சித்தாலோ அல்லது ஏதேனும் ஆலோசனை வழங்கவோ முயன்றால், அதைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அது மிகவும் பயனளிக்கும். வேறு வேலைக்கு மாற நினைத்தால், வேலை கிட்டும் வரை இருக்கும் வேலையை கைவிடாதீர்கள். தற்போதைய வேலையை விட்டால், பின் ரொம்ப கஷ்டப்படுவீர்கள். குடும்ப வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இது நல்ல காலம். ஒரு தொழிலதிபர் அல்லது தொழில்முனைவோராக இருந்தால், ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் உங்கள் பிடிவாதத்தால் உங்களுக்கு அதிக செலவு ஏற்படக்கூடும் என்பதால் தந்திரமாக செயல்படுங்கள். முதலீட்டைக் கொண்டு புதிய தொழிலைத் தொடங்க இது சாதகமான நேரம் அல்ல. உங்கள் பேச்சு அல்லது நடத்தை மூலம் தந்தைவழி உறவினர்களை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தோல் வியாதிகள், தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, இரத்த அழுத்தம், மூல நோய், வாயு போன்றவற்றால் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் குறித்து நீங்கள் கவலைப்படலாம். இக்காலத்தில் ஒருவித பதட்டத்துடன் இருப்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான ஆவணங்கள் அல்லது பிற சட்ட ஆவணங்கள் தொடர்பான திட்டங்கள் தாமதமாகலாம். உங்களுக்கு வரவேண்டிய பணத்தை திரும்பப் பெறுவது வழக்கத்தை விட கடினமாக இருக்கும். பங்குச் சந்தையில் அல்லது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்ய அவசரப்பட வேண்டாம். நீங்கள் ஏற்கனவே எங்காவது முதலீடு செய்திருந்தால், மோசடிக்கு வாய்ப்பு இருப்பதால் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில், யாரையும் விமர்சிப்பதை தவிர்க்கவும். திருமணமானவர்கள், உங்கள் துணையுடன் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பெற்றோரின் உடல்நலம் மோசமாகலாம் மற்றும் இது உங்களுக்கு நிறைய கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.

துலாம்
புதன் வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மார்பு வலி, வயிற்று பிரச்சினைகள், சிறுநீர் பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். எனவே உணவு பழக்கவழக்கங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் மாணவர்கள் தாமதங்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். வணிக உறவுகள் செழிக்க வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து, நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் தொடர்பான தடைகளை நீங்கள் அனுபவிக்கலாம் மற்றும் இது சில குடும்ப பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் தாயுடனான உறவு மேம்படக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உடல் நல பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள். சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். முடிவுகளை எடுக்க மற்றவர்களை ஆலோசிக்க வேண்டாம். புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு தடைகள் ஏற்படக்கூடும். மாணவர்கள் தங்கள் கல்வி குறித்து கவலைப்படலாம். பங்குச் சந்தையில் அல்லது காப்பீட்டில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம் அல்ல. பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிக்கக்கூடும். பணியில் இருக்கும் உங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கவும். பேசும் போது வார்த்தைகளைப் பார்த்து பயன்படுத்துங்கள். திருமண வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்திருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தற்போது எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது சற்று ஆபத்தாக இருக்கலாம். உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு மேம்படக்கூடும். காதல் வாழ்க்கை சில ஏற்ற தாழ்வுகளைக் காணலாம்; திருமண வாழ்க்கையில் சில சர்ச்சைகள் இருக்கலாம். இக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் அல்லது தொற்று மற்றும் எலும்பு வலி, தொடை வலி, வலது கை மற்றும் காலில் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். பணியிடத்தில் மேலதிகாரியுடனான தகராறு காரணமாக நீங்கள் விரக்தியடையக்கூடும். பணம் சேகரிப்பதில் நிறைய தடைகள் இருக்கலாம். வணிகர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் கை, தோள்பட்டை வலி, தொண்டை தொற்று, இருமல், சளி, தொற்று, சுவாசம் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். அறுவை சிகிச்சைக்கு செலவிட வேண்டியிருக்கும். இக்காலத்தில் மன அழுத்தம் சில முக்கியமான வேலைகளை குழப்பமடையச் செய்யலாம். எனவே, உங்கள் மன அழுத்தத்தை கவனித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். வணிகத்தில் உள்ளவர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்க முடியும். இக்காலத்தில் முதலீடு குறித்து எச்சரிக்கையாக இருங்கள். காதல் உறவுகளை கவனமாக கையாளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கடுமையான வயிற்று நோய்கள், மார்பு வலி, சுவாசக் கோளாறுகள் மற்றும் எலும்பு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். ஆஸ்துமா அல்லது மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு சில வாய்ப்புகள் கிட்டும். பங்குச் சந்தையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான காலம். ஒரு புதிய காதல் உறவு மலரக்கூடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் செலவுகள் கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கலாம். வட்டிக்கு அல்லது ஒரு திட்டத்திற்கு பணத்தை முதலீடு செய்யும் போது, கவனமாக இருக்கவும். சில புதிய முக்கியமான பணிகளுக்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும். புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். திடீர் குடும்ப பயணம் மேற்கொள்ளலாம். இக்காலத்தில் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். பெற்றோருடனான உறவுகள் மேம்படக்கூடும். நண்பர்களுடனான நட்பும் மேம்படக்கூடும்.