Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அந்த ராசி மாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, அதனால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

கேந்திர திரிகோண ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். இந்த யோகத்தினால் நிறைய ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, தொழில் வாழ்க்கையில் வெற்றிகளும் குவியும். இப்போது மகரத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அட்டகாசமான பலன்கள் வழங்கும். இந்த ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், இக்காலத்தில் அனைத்துவிதமான சுகங்களும் கிடைக்கும். மேலும் இந்த யோக காலத்தில் ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு, இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் அதிலிருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு வலுபெறும்.

மகரம்
மகர ராசியில் இந்த யோகமானது லக்ன வீட்டில் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் இக்காலத்தில் திறக்கப்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு புதிய திருமண வரன் கிடைக்கலாம். மேலும் இக்காலத்தில் கூட்டு தொழிலில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது இனிமையானதாக இருக்கும். இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த யோக காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. பணிபுரிபவர்களின் கௌரவம் இக்காலத்தில் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
