Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
புத்தியின் அதிபதியான புதன் ரிஷப ராசியில் ஏற்கனவே வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

புத்தியின் அதிபதியான புதன் ரிஷப ராசியில் ஏற்கனவே வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். வக்ர நிவர்த்தி அடைந்த புதன் ஜூலை 2 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைவார். ஜூன் மாதத்தின் ஆரம்பத்திலேயே புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால் ஒருவருக்கு கிடைக்கும் நற்பலன்களை தெரிந்து கொள்வதை விட, யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முன்பே தெரிந்து கொள்வதால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்போது புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு தேவையற்ற செலவுகளும் ஏற்படும். மேலும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீதிமன்ற வழக்குகளை வெளியே பேசி தீர்ப்பது நல்லது. இக்கால கட்டத்தில் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல ஏற்ற தாழ்வுகளை சந்திப்பார்கள். எந்த ஒரு திட்டங்களையும் சற்று கவனத்துடன் செய்யுங்கள். எந்த வேலையை செய்தாலும், அதில் கடின உழைப்பு தேவை. ஏனெனில் இக்காலத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும். வேலை வாய்ப்புகளில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். இல்லையென்றால், சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஆகவே இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உறவினர்கள் மூலம் சில கெட்ட செய்திகளை பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளை பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுவை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:
* புதன்கிழமைகளில் பச்சை நிறத்தில் ஆடைகளை அணியுங்கள்.
* உங்கள் சகோதரிகள் மற்றும் அத்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்.
* புதனின் தாக்கத்தைத் தவிர்க்க விஷ்ணுவை வழிபடுங்கள்.
* புதன்கிழமைகளில் தானம் செய்யுங்கள்.
* புதனுக்குரிய மந்திரங்களை சொல்லுங்கள். புதன் பகவானை மகிழ்விக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
* மரகத கல் மோதிரத்தை அணியுங்கள்.



Click it and Unblock the Notifications
