Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
கும்ப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் மார்ச் 31 வரை இந்த ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...
2023 பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் கும்பத்தில் அஸ்தமனமாகிறார். இந்த அஸ்தமன நிலையில் புதன் மார்ச் 31 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார். அதுவும் கும்பத்தில் அஸ்தமனமான புதன் மேஷத்தில் உதயமாகிறார்.
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் நுழைந்த மறுநாளே, அதாவது 2023 பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் கும்பத்தில் அஸ்தமனமாகிறார். இந்த அஸ்தமன நிலையில் புதன் மார்ச் 31 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார். அதுவும் கும்பத்தில் அஸ்தமனமான புதன் மேஷத்தில் உதயமாகிறார். இதற்கிடையே மீன ராசியில் அஸ்தமன நிலையிலேயே பயணிப்பார்.

பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருப்பதோடு, அசுப பலன்களையே அதிகம் வழங்கும். அதுவும் புதன் அஸ்தமன நிலையில் மீனத்தில் பயணிப்பதால், இக்கால கட்டத்தில் பெரும்பாலான ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களையே பெறக்கூடும். புதன் பேச்சு, புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக இருப்பதால், அஸ்தமன நிலையில் இருக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது கும்ப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்தாலும், படிப்படியாக குறையும். ஆசைகளை நிறைவேற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க முடியாமல் போகலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பெரிய முடிவுகளை எடுக்கும் போது சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வேலைச்சுமை அதிகரிக்கும். இதன் விளைவாக உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சற்று விழிப்போடு இருங்கள். தேவையற்ற செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இந்த காலகட்டத்தில், அதிகப்படியான உடல் சோர்வு, பலவீனம் மற்றும் கண் பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலையில் வெற்றியைக் காண முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும். அரசு வேலை செய்பவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கலாம். உங்கள் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் ஏற்பட்டு, அதனால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. ஆயினும் வேலை தேடுபவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். பங்கு சந்தையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது. திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் கூட்டு வணிகம் செய்பவர்கள் இக்காலத்தில் பிரச்சனைகளை மற்றும் மோதல்களை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் அதிகமாக வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். ஆனால் உயர் அதிகாரிகளுடன் சண்டை வராமல் கவனமாக இருங்கள். படிப்படியாக பண வரவு அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைப்பளு அதிகமாக இருக்கும். இக்காலகட்டத்தில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், அதிகம் முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் மற்றும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வேலை விஷயமாக பயணம் செய்ய நேரிடும். வேலையை மாற்ற வேண்டிய சூழலை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். நிதி நிலை மேம்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதன் விளைவாக உங்கள் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையும். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கியிருந்தால், இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் புதிய தொழிலை தொடங்க சிறந்த காலம் அல்ல. நிதி நிலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை விஷயமாக பயணத்தை மேற்கொள்ள நேரிடும். வேலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடனான உறவு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழிலதிபர்கள் இந்த காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்கலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண்பார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வணிகம் வேகமாக வளரும். நல்ல நிதி ஆதாயம் உண்டாக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி ரீதியாக இக்காலம் நன்றாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக இருக்க வேண்டும். எதையும் நன்கு சிந்தித்த பின்னரே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களும் தங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, இக்காலம் நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண புதிய உத்திகளைக் கையாள்வீர்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்வில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வேலையில் திடீர் மாற்றங்களைக் காணக்கூடும். உங்களின் பணிச்சுமை அதிகரிக்க்கும். இக்காலத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வணிகத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications