Just In
- 44 min ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 2 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 7 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!
- Movies
பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!
- Finance
தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...
மாண்டி பிரையன்ட் என்ற ஒரு ஆசிரியர், தான் செல்லமாக வளர்க்கும் ஒரு வண்டிடம் மார்க்கரைக் கொடுத்து ஓவியம் வரையச் சொல்லும் வரை, அந்தப் படங்கள் ஒரே இரவில் மிகவும் பிரபலமடையும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆம், அவரின் செல்ல வண்டு ஸ்பைக்கின் ஓவியத் திறமை இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
ஸ்பைக் என்னும் பெயர் கொண்ட இந்த வண்டு, அமெரிக்காவில் பிறந்து தற்போது ஜப்பானில் வசித்து வரும் ஆங்கில ஆசிரியரான மாண்டி பிரையன்ட் என்பவருக்கு சொந்தமானது.
தனது செல்லப்பிராணியைப் பற்றி ஊடகங்கள் கேட்டபோது, வண்டுகளை ஒரு செல்லப்பிள்ளையாக வைத்திருப்பது ஜப்பானில் பொதுவானது, ஏனெனில் பூனைகள் மற்றும் நாய்களை அனுமதிக்காத விசாலமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நல்ல செல்லப்பிராணியாகவும் நண்பனாகவும் விளங்குவது இந்த வண்டு என்று அவர் குறிப்பிடுகிறார்.
|
செல்ல வண்டு
பிரையன்ட் மேலும் கூறுகையில், "வண்டுகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்று நான் நினைக்கிறேன். நிறைய சிறிய செல்லப் பிராணிகளைப் போலல்லாமல், அவை திடீரென்று ஓடி வந்து மேலே ஏறிக்கொள்ளாமல், எளிதாக துணிகளைப் பற்றிக் கொள்கின்றன. அதனால் உங்கள் தோள்களில் அமர்ந்து கொள்ளும் செல்லப் பிராணியுடன் நீங்கள் அமர்ந்து வேலை செய்யலாம், தொலைக் காட்சி பார்க்கலாம். இதனால் உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை" என்று கூறுகிறார்.
திறமை என்று வரும்போது இயற்கை எந்த ஒரு ஜீவனுக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பது ஸ்பைக் போன்ற ஜீவ ராசிகளைப் பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது. மேலும் இதன் மூலம் வண்டுகளின் வலுவான பிடியைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மார்க்கர் பேனாவைப் பற்றிக் கொள்ளும் அளவிற்கு அதன் வலிமை உள்ளது. அனால் ஓவியங்கள் வரைவதில் ஸ்பைக்கின் ஆர்வம் எப்படி வந்தது என்பது குறித்த கேள்விக்கு மாண்டியிடம் கூட பதில் இல்லை.
MOST
READ:
அஜித்
படம்
பார்க்க
லீவு
கேட்ட
லீவ்
லெட்டர்
எழுதிய
மாணவன்...
நீங்களே
பாருங்க...
|
ஸ்பைக் என்ற வண்டைப் பற்றி...
ஆசியாவிலும் காணப்படும் இத்தகைய வண்டுகள் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களாகக் கருதப்படுகின்றன என்று மாண்டி கூறினார். வண்டு மிகவும் 'இனிமையான மற்றும் ஆர்வமுள்ள' மற்றும் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு உயிரினம் என்று அவர் கூறுகிறார். இந்த சிறிய உயிரினம் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தான் மேலும் இரண்டு வண்டுகளை வளர்த்துக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு குணநலன்கள் இருப்பதாகவும் மாண்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஸ்பைக் உண்மையிலேயே ஒரு கலைஞன் என்பதை விளக்கும் மற்றொரு செய்தியாக மாண்டி கூறுவது, வண்டுகளுக்கு பிடித்த உணவான ஜெல்லியை அவைகளுக்கு ஒரு மரக் கோப்பையில் தரும்போதெல்லாம், ஆழமான அந்தக் கோப்பையில் இருந்து ஜெல்லியை வெளியில் எடுத்து தரைமட்டமான இடத்தில் வைத்து உண்ணக் கூடிதாக ஸ்பைக் உள்ளது என்பதை மாண்டி நினைவு கூறுகிறார்.
|
ஸ்பைக்கின் ஓவியங்கள்
ஸ்பைக்கின் சிறிய ஓவியங்களைப் பற்றி பேசுகையில், அந்த அழகான ஓவியங்களுக்கு அவர் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். ஸ்பைக்கின் ஓவியங்களின் ஏலம் $ 130 (£ 100) ஐ எட்டியது.
MOST
READ:
ஆண்களைவிட
பெண்களுக்கு
ஏன்
ஒற்றைத்
தலைவலி
அதிகமா
வருது
என்று
தெரியுமா?
|
வண்டுகளை செல்லபிராணியாக வளர்க்க வேண்டும்?
செல்லப் பிராணி என்ற இடத்தில் வண்டுகளை வந்து பார்ப்பது அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றாலும், ஸ்பைக் போன்ற வண்டுகள் இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.
இந்த வீடியோ ஸ்பைக்கின் கலைத் தன்மையைக் காண்பித்தது மட்டுமல்லாமல், மக்கள் இப்போது பூச்சிகளைப் பாராட்டும் நிலை வந்துள்ளது என்ற நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.
இந்த குறிப்பில், "என்னதான் ஸ்பைக் ஒரு அழகான தோற்றமளிக்கும் ஒரு வாலிபனாக இல்லாத போதிலும், ஸ்பைக்கின் மீதான அன்பின் அளவு அதிர்ச்சியூட்டும் மற்றும் உண்மையில் நம்பமுடியாததாக உள்ளது. அழகான மற்றும் கவர்ச்சிகரமான இந்த இயற்கை உலகின் மற்ற விஷயங்களைப் போல மக்கள் பூச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நம்புகிறேன்; அவை உண்மையில் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமாக இல்லை "மாண்டி கூறுகிறார். "தழுவிக் கொள்ளத் தூண்டும் மற்ற உயிரினங்களை விட பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் இந்த வண்டுகளை வளர்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஓவியக் கலையை விரும்பும் மற்றொரு வண்டு கூட இந்த உலகில் இருக்கலாம், யாருக்குத் தெரியும்? என்றும் அவர் குறிப்பிடுகிறார்.