Latest Updates
-
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புற்றுநோய் பாதிப்பும் கிரக கோளாறுகளும் - பரிகாரங்கள்
ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவது அவரது பூர்வ புண்ணியத்தின்படியே ஏற்படுகிறது. புற்றுநோய்க்கு பாம்பு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக
எப்பொழுதுமே நல்ல ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. எப்பொழுதாவது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகளை சந்திப்பவர்களும் உண்டு. தினம் தினம் நோய் நொடியால் அவதிப்படுபவர்களும் உண்டு. இதற்குக்காரணம் கிரகக் கோளாறுகளும் நமது ராசி லக்னங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் விதமும்தான். ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவது அவரது பூர்வ புண்ணியத்தின்படியே ஏற்படுகிறது. புற்றுநோய்க்கு பாம்பு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது.
நோய்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதோடு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பரிகாரம் தேடி ஜோதிடரையும் தேடி செல்கின்றனர். இந்தியாவில் ஒரே ஆண்டில் புற்று நோயால் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உயிர்க் கொல்லி நோயான புற்று நோய் இந்தியாவில் அதி விரைவாக பரவி வருகிறது. எனவே இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு கிரகங்களின் சேர்க்கையும் கூட காரணமாவதாக வேத ஜோதிடம் சொல்கிறது.

நவகிரகங்கள்
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும். நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் கிரகம் ராகுவாகும். எனவே தான் 'ராகுவைப்போல கொடுப்பானுமில்லை' என்று அனுபவ வாக்காக முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

ராகு - கேது
பாம்பு கிரகங்கள் எனப்படும் ராகு - கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்குத் தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மாவள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

சனி ராகு சேர்க்கை
லக்னாதிபதி+ சந்திரன் ஆகிய இரண்டும் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்று, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு உறுதியாக புற்றுநோய் ஏற்படும் என கணிக்கலாம். ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனியுடன் ராகு இணைந்திருந்தால் அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவார். புகையிலை மெல்லுவார். இதன் மூலம் அவருக்கு வாய் புற்றுநோய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.

புற்றுநோய்
லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் அல்லது அவருக்கு மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்ணாக இருந்தால் கரு முட்டை உருவாகாத குறைபாடு இருக்கும். செவ்வாய் உடன் கேது சேர்ந்திருந்தால் ரத்த ஓட்டத்தில் தடை, விகாரமான பற்கள், ரத்த சோகை, முல வியாதி, புற்று நோய், கட்டிகள், குடல் இறக்கம் ஏற்படும் என ஜோதிடம் சொல்கிறது.

நாடு முழுவதும் புற்றுநோய்
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 6 கோடியே 50 லட்சம் பேர் புற்று நோய் பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வாய் புற்று நோய், கர்ப்பபை புற்று நோய், மார்பக புற்று நோய் உள்ளிட்டவை அடங்கும். அதே நேரத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் 3 கோடியே 50 லட்சம் பேர் புற்று நோய் பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் 39 ஆயிரத்து 635 பேருக்கு மட்டுமே புற்று நோய் பாதிப்பு இருந்தது. இதை ஒப்பிடும் போது ஒரே ஆண்டில் புற்று நோய் தாக்கம் 324 சதவீதம் அதிகரித்துள்ளது.

புற்றுநோய்க்கு காரணம்
அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே புற்று நோய் அதிகரிப்பிற்கான காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம், மன அழுத்தம், புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது அருந்துதல், போன்ற காரணங்களால் புற்று நோய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புற்றுநோய் அறிகுறிகள் முன்னதாகவே தென்பட்டால் அதற்கேற்ப பரிகாரம் செய்வது நல்லது.

நோய் ஸ்தானம்
ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சூரியன்+செவ்வாய் உடன் ராகு அல்லது கேது அல்லது சனி சேர்ந்திருந்து, சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

ராகு கேது அன்ன பிரசாதம்
வாலாஜா பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள ஏக சரீர ராகு - கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. தன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை சாப்பிட்டால் உடல் செரிமானம் மற்றும் வயிறு, புற்றுநோய் தொடர்பான நோய்கள் நீங்கும் என நிறுவனர் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

ராகு கால வழிபாடு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணம் ஆலயம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருமுருகன்பூண்டி ஆலயங்களில் ராகு காலத்தில் வழிபட புற்றுநோய், செரிமான கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நிதி கொண்டு அருள் பொழியும் துர்க்கையை தரிசித்தால் ராகு-கேதுவினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications