Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மாட்டுப் பொங்கல் தமிழர்களுக்கு ஏன் ரொம்ப ஸ்பெஷல்? அன்னைக்கு என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?
தமிழர்களுடைய மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த பண்டிகை பொங்கல் திருநாளாகும். போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் பண்டிகையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
இந்த பண்டிகை தமிழர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். பண்டைய காலத்திலிருந்து தமிழக மக்களால் பாரம்பாியமாக ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 ஆவது நாள் அதாவது தை மாதம் 2 ஆம் நாள் அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இது "மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல்" என்று கூறப்படுகிறது. விவசாயத்திற்கு துணையாக இருக்கின்ற விலங்குகளான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை ஜனவரி 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கையோடும் விவசாயத்தோடும் ஒன்றி இருக்கும் பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதி மாலை 8 மணிக்கு மேல் மாட்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடலாம்.

மாட்டுப் பொங்கல் வரலாறு
தைப்பொங்கலை தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். இது தமிழர்களின் மிகவும் பிரபலாமான பண்டிகையாகும். காமதேனு என்கின்ற கற்பக பசுவின் சந்ததிகள் தான் பசுக்கள் ஆகும்.
அவை மனிதர்களுக்கு பல வழிகளில் பல நன்மைகள் தருவதனால் அவற்றினை கோமாதா தெய்வம் என்று வழிபட்டு வருகின்றனர். விவசாயத்திற்கு முதன்மையாக உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்க மாட்டுபொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகள் கட்டிருக்கும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கோலமிடுவார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள்.
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி, மஞ்சள், குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். மேலும், பூ மாலைகளையும் மாட்டின் கழுத்தில் காட்டுவார்கள்.

விவசாயத்திற்கு உதவும் கருவிகள்
பின்னர், உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.
பெரிய தட்டுகளில் வயல் அல்லது தோட்டம், காடுகளில் விளைந்த பயிர்கள் மற்றும் காய்கறிகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.

பொங்கலோ, பொங்கல்
தொழுவத்திலேயே சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை மற்றும் ஆடு என விவசாயத்திற்கு உதவும் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கலும், வாழைப்பழமும் கொடுப்பார்கள்.
அப்போது 'பொங்கலோ, பொங்கல்" என்று கூச்சலிட்டு கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டுவது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும்.

ஜல்லிக்கட்டு
மாட்டுப் பொங்கல் விழாவின் முக்கிய சிறப்பு அம்சம் மஞ்சு விரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு. இது தமிழர்களின் வீர விளையாட்டாகும். மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெறும். இந்த வீர விளையாட்டில் பெரும்பாலான இளைஞா்கள் கலந்துகொள்வார்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடலின் வாடி வாசலிலிருந்து சீறிக்கொண்டு பாய்ந்து ஓடிவரும் காளை மாடுகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பெரிய பரிசுகள் கொடுக்கப்படும். இந்த விளையாட்டு பொதுவாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாலையில் நடைபெறும். சில கிராமங்களில் மாட்டுப் பொங்கல் நாளுக்கு ஒரு நாள் கழித்து, கண்ணும் பொங்கல் நாளில் நடத்தப்படும்.

மாட்டுப் பொங்கலின் மகத்துவங்கள்
மனிதர்களுடைய வாழ்வில் பல வழிகளிலும் மாடுகள் இணைந்துள்ளன. எல்லா மக்களும் மாட்டின் பாலை குடித்து வளர்க்கிறோம். ஒரு தாயினை போலவே பால், தயிர், மோர், நெய் என்று பலவற்றை தந்து மனிதர்களின் உணவிலும் ஆரோக்கியத்திலும் மாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பசுவை வீட்டினுள் அழைத்து வந்தால், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. மாடுகளை வைத்தே முன்பு செல்வங்கள் அளவிடப்பட்டது. இதன் மூலமாக மாடுகளுக்கான மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எகாளை மற்றும் எருது வயலை உழவும் வண்டிகளை இழுக்கவும் பயன்படுகின்றது. எனவே விவாசாயம் செய்யும் மக்களுக்கு மாடு தெய்வாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications











