Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
மகா சிவராத்திரி அன்று சிவனின் முழு அருளும் கிடைக்க வேண்டுமானால், ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற சிவ மந்திரங்களை சொல்லி சிவனை வழிபட வேண்டும்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளின் பட்டியலில் மகா சிவராத்திரியும் ஒன்று. இந்நாளில் சிவன் கோயில்களில் ஏராளமான சிவபெருமானின் பக்தர்களைக் காணலாம். மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு நேரங்களில் கண் விழித்து விரதங்களை கடைப்பிடித்து, சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து வருவார்கள்.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரி மிகவும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2022 மார்ச் 01 அன்று வருகிறது.
சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்கள் பலவிதமான பொருட்களை சிவபெருமானுக்கு படைத்து வணங்குவார்கள். ஆனால் மகா சிவராத்திரி அன்று சிவனின் முழு அருளும் கிடைக்க வேண்டுமானால், ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற சிவ மந்திரங்களை சொல்லி சிவனை வழிபட வேண்டும். கீழே மகா சிவராத்திரி அன்று 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய சிவ மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனின் அருளைப் பெற 'நாகேஷ்வராய நமஹ:' என்னும் மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

ரிஷபம்
மகா சிவராத்திரி நாளில் ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள், 'ஓம் த்ரி நேத்ராய நமஹ:' என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதனால் சிவபெருமானின் ஆசியைப் பெறலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 'ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ:' என்னும் சிவ மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் உச்சரித்து சிவனை வழிபடுவது மிகவும் நல்லது.

கடகம்
மகா சிவராத்திரி அன்று கடக ராசிக்காரர்கள் 'ஓம் ஜனனபூதாய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி சிவனை வழிபட்டால், சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று 'ஓம் ஓம்காராய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறுவது நல்லது. இதனால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிவனின் அருளை சிவராத்திரி அன்று பெற நினைத்தால், 'ஓம் யுக்தகேசத்மரூபயா நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் அருள் கிடைக்க 'ஓம் நந்தேஷ்வராய நமஹ' என்னும் சிவ மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று 'ஓம் கம்கத்தராய நமஹ' என்னும் சிவபெருமானின் மந்திரத்தைக் கூறி வழிபடுவது நல்லது.

தனுசு
மகா சிவராத்திரி அன்று தனுசு ராசிக்காரர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து 'ஓம் ஞானபுத்தாய நமஹ' என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர, சிவனின் அருள் கிடைக்கும்.

மகரம்
சிவபெருமானின் தீவிர பக்தரான சனி பகவான் ஆளும் ராசி தான் மகரம். இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் முழு அருளும் கிடைக்க வேண்டுமானால், 'ஓம் சோம்நாதாய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் 'ஓம் தத்புருசாய நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறி சிவபெருமானை வழிபட்டு வந்தால், சிவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

மீனம்
மகா சிவராத்திரி நாளில் மீன ராசிக்காரர்கள் 'ஓம் தயாநிதி நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி வழிபட்டு வந்தால், சிவபெருமானை குளிர்வித்து அவரது முழு அருளைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications