Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க வேண்டுமா? அப்ப மகா சிவராத்திரி அன்று இத செய்யுங்க..
சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தர் என்பதால், மகா சிவராத்திரி நாளில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் ஒருசில பரிகாரங்களை செய்வதன் மூலம், சனியின் தாக்கத்தை குறைக்கலாம்.
மகா சிவராத்திரி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று. இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் மகா என்ற சொல்லுக்கு பெரிய என்பது பொருள். சிவராத்திரி என்பது சிவனுக்கு உரிய இரவு என்று பொருள்.

அதாவது மகா சிவராத்திரியானது, சிவனை வழிபட ஏற்ற சிறந்த இரவு ஆகும். இந்த இரவு சிவபெருமான் தாண்டவ நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்நாளில் தான் சிவன் பார்வதி தேவியை கைலாச மலையில் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த 2023 மகா சிவராத்திரி
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாள் மிகவும் மங்களகரமானது மற்றும் சில அரிய நிகழ்வுகளும் நடைபெறுவதால், அது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அதாவது இந்நாளில் சனி பிரதோஷம் வருவதோடு, கும்பத்தில் சனி, சூரியன் மற்றும் சந்திரனும் ஒன்றிணைந்து பயணிக்கிறார்கள். இதனால், ஏழரை சனி, அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று நிவாரணம் பெறுவார்கள். அதற்கு ஒருசில பரிகாரங்களை மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம். ஏனெனில் சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தர்.

மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷ விரத நேரம்
முன்பே கூறியது போன்று. மகா சிவராத்திரியானது மாசி மாத சதுர்த்தசி திதியில் தொடங்கும். எனவே இந்த சிவராத்திரியானது 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 08.05 மணிக்கு தொடங்கி, 2023 பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 04.21 மணிக்கு முடிவடைகிறது. சனி பிரதோஷ விரதமும் மகா சிவராத்திரி நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்து பஞ்சாங்கத்தின் படி, தரயோதசி திதி, அதாவது சனிப் பிரதோஷம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு 11.38 மணிக்கு தொடங்கி, 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு 08.05 மணிக்கு முடிவடைகிறது.

மகா சிவராத்திரியில் திரிகிரக யோகம்
எப்போது ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் இணைந்து பயணிக்கிறதோ, அப்போது திரிகிரக யோகம் உருவாகும். அந்த வகையில் கும்பத்தில் சனி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் மகா சிவராத்திரி நாளில் ஒன்றிணைந்து பயணிக்கின்றன. இதனால் இந்த சிவராத்திரியில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகமானது ஏழரை சனி மற்றும் சனியின் பிற தாக்கத்தில் இருந்து விடுபட உதவி புரியும். அதற்கு ஒருசில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

2023 மகா சிவராத்திரியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
மகா சிவராத்திரியானது இந்தியாவில் பல பகுதிகளில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மகா சிவராத்திரியானது தனித்துவமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் இந்நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து, சிவனுக்கு வில்வ இலை, ஊமத்தம் பூ, மற்றும் பல பொருட்களை சிவனுக்கு படைப்பதோடு, பாரம்பரிய நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள், ருத்ராபிஷேகம் போன்றவற்றையும் செய்து, சிவபெருமானின் ஆசியைப் பெறுவார்கள்.
சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தர் என்பதால், மகா சிவராத்திரி நாளில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் ஒருசில பரிகாரங்களை செய்வதன் மூலம், சனியின் தாக்கத்தை குறைக்கலாம். கீழே அந்த பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
* நீரில் எள்ளு விதைகளை போட்டு கலந்து, அந்நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
* மகா சிவராத்திரி நாளில் அரச மரத்திற்கு நீரை ஊற்றி, 5 வகையான இனிப்புக்களை படைத்து சிவனை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவனுடன் அனுமனையும் வழிபட வேண்டும்.
* மகா சிவராத்திரி நாளில் ஏழை எளியோருக்கு தங்களால் முடிந்ததை தானம் செய்யுங்கள்.
* மேலும், இந்நாளில் சிவபுராணம் மற்றும் மகா மிருத்யுஞ்சாய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications