For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 19-இல் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எங்கு தெரியும்? அதை எப்படி பார்ப்பது?

2021 நவம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் சந்திர கிரகணம், இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்த சந்திர கிரகணங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இந்த சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.

|

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகியவை நட்சத்திர மண்டலத்தில் நிகழும் வானியல் நிகழ்வுகள். இந்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். முன்னதாக மே 26 ஆம் தேதி மொத்த சந்திர கிரகணம் ஏற்பட்டது.

Lunar Eclipse 2021: Longest eclipse of the 21st century on November 19, when, where ad How to watch In Tamil

ஆனால் 2021 நவம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் சந்திர கிரகணம், இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்த சந்திர கிரகணங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இந்த சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம்

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம்

இது கடந்த 600 ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணம். பொதுவாக பூமியின் நிழல் நிலவின் மீது படும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் 3 மணிநேரம் 28 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு நீடித்திருக்கும். 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கிரகணமானது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் நீடித்திருந்தது. கடைசியாக இவ்வளவு நீளமான பகுதி கிரகணம் பிப்ரவரி 18, 1440 அன்று ஏற்பட்டது. அடுத்த முறை பிப்ரவரி 8, 2669 அன்று இதே போன்ற ஒரு கிரகணம் ஏற்படும். ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணமாக இந்த நவம்பர் மாத சந்திர கிரகணமாக இருக்கும்.

சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் இருக்கும்?

சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் இருக்கும்?

2021 நவம்பர் 19 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம் நள்ளிரவு 12.48 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.17 மணிக்கு முடிவடையும் என நாசா தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

நாசாவின் கூற்றுப்படி, இந்த சந்திர கிரகணம் மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தெரியும். இந்தியாவில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய பகுதிகளில் தெரியும்.

கிரகணத்தை எப்படி பார்க்கலாம்?

கிரகணத்தை எப்படி பார்க்கலாம்?

நீங்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்தால், வெறும் கண்ணால் கிரகணத்தைப் பார்க்கலாம். இந்த கிரகணத்தைக் காண சிறப்பு உபகரணங்கள் அல்லது தொலைநோக்கிகள் எதுவும் தேவையில்லை.

அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

அடுத்த மொத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி நிகழும். ஆனால் இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இந்தியாவில் தெரியக்கூடிய அடுத்த சந்திர கிரகணம் என்றால் அது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதி நிகழும் மொத்த சந்திர கிரகணம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lunar Eclipse 2021: Longest Eclipse Of The 21st Century On November 19, When, Where And How To Watch In Tamil

Lunar Eclipse 2021: Longest eclipse of the 21st century on November 19, when, where ad How to watch in tamil, Read on...
Desktop Bottom Promotion