Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
எந்த ராசிக்கு எது அதிர்ஷ்ட மரம்? தெரிஞ்சிக்கங்க... அதிர்ஷ்டத்த அனுபவிங்க...
உங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் இறைத்தன்மை மிக்க மரங்கள் பற்றி இஙகே விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த ராசிக்கு எது அதிர்ஷ்ட மரம்? தெரிஞ்சிக்கங்க... அதிர்ஷ்டத்த அனுபவியுங்கள்.
மொத்தம் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் மற்றும் ராசிகளுக்கும் தனித்தனி குறியீடுகளும் அதற்கென தனியே அதிர்ஷ்டம் தரும் இறைத்தன்மைக்கு உரிய மரங்கள் என்றும் உண்டு.

அப்படி இறைவனின் தல விருட்சங்களாக இருக்கிற மரங்களை வழிபாடு செய்து வரும்போது, அந்த மரங்களின் குணங்களையும் நன்மைகளையும் பெறுவதோடு சகல நன்மைகளையும் செல்வங்களையும் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எந்த ராசிக்கு எந்த மரம்
அந்த ஒவ்வொரு மரத்துக்கும் தனியே மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் தான் பழங்காலத்தில் மக்கள் மரங்களை வழிபட்டு வந்தனர்.
ஒவ்வொரு ராசியினரும் அந்தந்த ராசிக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே அதிர்ஷடமும் நற்பலன்களும் உண்டாகும். அப்படி ஆன்மீகத் தன்மை கொண்ட, உங்களுடைய ராசிக்கு ஏற்ற மரத்தை வழிபடுவதோடு வீட்டிலும் வளர்க்கலாம். அதற்கு தினமும் உங்களுடைய கைகளால் நீர் ஊற்றி வளர்க்கலாம். இதனால் உங்களுக்கு ஆரோக்கியம் முதல் அனைத்து வளங்களும் கிடைத்து சுபிட்சம் உண்டாகும்.

மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள் செஞ்சந்தன மரத்தை வழிபட்டு வர வேண்டும். இதற்கு சந்தன வேங்கை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேஷ ராசிக்காரர்கள் வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். முக்கிய நாட்களில் சந்தன மரத்தை வழிபடுவதும் இஷ்ட தெய்வத்துக்கு சந்தனக் காப்பிட்டு அபிஷேகம் செய்வது நல்லது.

ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் அத்திப்பழ மரத்தை வழிபாடு செய்ய வேண்டும். சுப தினங்களில் கோவில்களில் உள்ள அத்தி மரத்தை பதினோரு முறை சுற்றி வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிச்சுமைகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அத்தி மரத்தில் எப்படி பூத்து, காய் காக்கிறது என்று அறிந்து கொள்ள முடிவதில்லையோ அதேபோல், உங்களுடைய துன்பம் விலகி, வாழ்வில் இன்பம் பெருகும்.

மிதுன ராசி
ஒரு காலத்தில் நிறைய சிவாலயங்களில் வில்வ மரம் இருந்த அளவுக்கு பலா மரங்களும் ஸ்தல விருட்சமாக இருந்துள்ளன. கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அம்மன்விக்கிரகமே பலா மரத்தில் செய்யப்பட்டிருக்கிறது. பலாமர வழிபாடு குழந்தை பேறைக் கொடுக்கும். இந்த ராசிக் காரர்கள் தங்கள் குழந்தைக்கு தொட்டில் பலா மரத்தில் செய்வது, பலா மரக் கட்டிலில் தூங்குவதும் கூடுதல் நன்மைகளைத் தரும்.

கடக ராசி
திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத்தலங்களில் புரசு (பலாசம்) தல மரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.
இது காமம் பெருக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் இருக்கும். அவ்வளவு சிறப்பான மருத்துவ குணம் கொண்ட வழிபடுவதில் தவறில்லையே.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் குருந்த மரத்தை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு சகல செல்வங்களும் கைகூடி வரும். இது திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோயிலின் தல மரமாக விளங்குகிறது. இதில் சிறு குருந்து, பெருங்குருந்து என்னும் வகைகளும் உண்டு. உடல்வெப்பத்தை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது.

கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மாமரம். ஏகாம்பர நாதர் கோவில் மற்றும் மயிலாடுதுறை, ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில்களில் மா மரம் தான் தல விருட்சமாக இருக்கிறது. முருகன் சிவனை மாமரத்தின் அடியில் நின்று வணங்கி வரம் பெற்ற சிறப்புண்டு. அதனால் மா மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தால் மூதாதையர்களின் பரிபூரண ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.

துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மகிழ மரம். மகிழம்பூ மரத்தின் மணம்மிக்க மலர்களில் இருந்து, வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தன மர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம். மகிழ மரத்திற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை. ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் உயரம் இருபது முதல் ஐம்பது அடி உயரம் வளரக் கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய, நறுமணமான பூக்களை உடைய பசுமை மரம். இந்த மரத்தை வழிபட்டால் கல்வியும் ஞானமும் பெருகும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் கருங்காலி மரம். வெப்பத்தை தங்கிவளரும். இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியளிக்கும் சக்தி கொண்டது.

தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் அரசு. அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றது. அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறன.
அரச மரத்தின் பட்டை, வேர், விதை இவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பை, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். அரச மரத்திலிருந்து வெளியிடப்படும் தூய்மையான அதிகப்படியான பிராணவாயு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மகர ராசி
மகர ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் ஈட்டி மரம். குறிப்பாக, பூராட நட்சத்திரத்தன்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது உங்கள் குறைகளைப் போக்கி, இனிமையான வாழ்க்கைக்கு வழிகாட்டும். மற்ற ராசிக்காரர்களும் இதை வழிபடலாம். ஆனாலும் மகர ராசிக்காரர்கள் வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் செல்வங்களையும் பெற முடியும்.

கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் வன்னி. சிவனுக்கு மட்டுமே உரிய முதல் தல விருட்சமாகும். மற்ற தெய்வங்களுக்கு வன்னி மரம் தல விருட்சமாக இருப்பதில்லை. வன்னி மர குச்சிகள் இல்லை என்றால் சிவனுக்கு எந்தவொரு யாகமும் முக்தி பெறாது என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு இறைத் தன்மையும் முக்கியத்துவமும் பெற்றது. அதனால், வன்னி மரம் தல விருட்சமாகக் கொண்ட சிவனை வழிபடுவது சிறப்பாகும். தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் ஆகிய முக்கிய சிவாலயங்களில் தான் பெரும்பாலும் வன்னி மரம் தல விருட்சமாக அமைந்திருக்கிறது.

மீன ராசி
மீன ராசிக்காரர்கள் புன்னை மரத்தை வழிபட்டு வர வேண்டும். குறிப்பாக, திருமணம் தடைபடுகிறவர்கள் புன்னை மரத்தை வழிபடுவது சிறப்பு. புன்னை மரத்தை திருமணம் தடைபடுவோர் சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் நவக்கிரகங்கள் மற்றும் துணைவியாருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட்டு வந்தாலும் உடனே திருமணத் தடைகள் விலகி, மணம் கைகூடி வரும்.



Click it and Unblock the Notifications











