For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியின் போது துர்கை தேவி அனைவருக்கும் என்னென்ன வரங்களை கொடுக்கிறார் தெரியுமா?

நவராத்திரியின் போது துர்கை தேவி அனைவருக்கும் என்னென்ன வரங்களை கொடுக்கிறார் தெரியுமா?

|

நவராத்திரி இந்தியாவின் மிகவும் முக்கியமான விழாவாகும்.நவராத்திரி துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி ஆகிய மும்மூர்த்திகளின் கலவையாக துர்கா தேவி இருப்பதாக நம்பப்படுகிறது. நவராத்திரியின் போது மூன்று தேவிகளும் வழிபடப்படுகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது தெய்வீக நாட்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Lessons that Goddess Durga gives us every Navaratri in Tamil

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில், துர்கா தேவி தனது பயங்கரமான, அழிவுகரமான மற்றும் சக்திவாய்ந்த வடிவில் வழிபடப்படுகிறார். இந்த மூன்று நாட்களிலும் பக்தர்கள் தங்கள் தோஷங்கள் நீங்கும்படி அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். தெய்வீக மற்றும் ஆன்மீக ஆற்றலைப் பெற அவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். லட்சுமி தேவி செழிப்பின் சின்னம், செழிப்பைக் கொண்டுவரும் சக்தி. அடுத்த மூன்று நாட்களில், துர்கா தேவி அவருடைய செழிப்பைக் கொடுக்கும் வடிவத்தில் வழிபடப்படுகிறார். முதல் மூன்று நாட்களில், நமது எதிர்மறையான அணுகுமுறையை அகற்றுவோம். எனவே அடுத்த மூன்று நாட்களில், நேர்மறை மனப்பான்மை எதிர்மறையான அணுகுமுறையை மாற்றுகிறது. நேர்மறையான மற்றும் நம்பிக்கையான அணுகுமுறையுடன், பக்தர்கள் தடைகளை நீக்கி, தங்கள் பாதையில் வெற்றியைக் கொண்டுவர பிரார்த்தனை செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lessons that Goddess Durga gives us every Navaratri in Tamil

Check out the lessons that Goddess Durga gives us every Navaratri.
Story first published: Monday, October 3, 2022, 15:00 [IST]
Desktop Bottom Promotion