Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Leo Horoscope 2022: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நீங்கள் சிம்ம ராசிக்காரரா? உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இந்த 2022 புத்தாண்டு உங்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும்.
நீங்கள் சிம்ம ராசிக்காரரா? உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஜாதகத்தின்படி, இந்த புத்தாண்டு உங்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும். இந்த ஆண்டில் பல புதிய பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த அல்லது மாற்றுவதற்கு நிறைய பணத்தை செலவழிப்பீர்கள்.

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு இருப்பதால், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பான பலன்களைத் தருவதாக இருக்கும். இந்த ஆண்டில் உங்கள் முடிவில் உங்கள் நம்பிக்கை வலுவாக இருக்கும். இப்போது 2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நிதி நிலைமை, காதல் வாழ்க்கை, வியாபாரம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை விரிவாக காண்போம்.

2022-ல் காதல் வாழ்க்கை
2022 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிம்ம ராசிக்காரர்கள் துணையுடன் சில மோதல்களை சந்திக்கலாம். நீண்ட கால உறவில் இருக்கும் தம்பதிகள் திருமணம் செய்துகொள்வார்கள். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திருமண முயற்சிகள் நிறைவேறும். 2022 ஆம் ஆண்டில் உறவில் உள்ளவர்கள் துணையுடன் சிறந்த புரிதலை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டில் சிறிய மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை உறவை பெரிதாக பாதிக்காது.

2022-ல் தொழில் வாழ்க்கை
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தைப் பொறுத்தவரை, வேலை மற்றும் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். குரு 7 ஆவது வீட்டில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் தொழிலில் கணிசமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டாண்மை வேலை செய்பவராக இருந்தால், புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் அதிக மரியாதையைப் பெறுவார்கள்.

2022-ல் கல்வி
2022 ஆம் ஆண்டில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் சிம்ம ராசிக்கார மாணவர்கள், ஆண்டின் தொடக்கத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் சிரமத்தை சந்திக்க நேரிடும். உயர் கல்வி படிக்கஆசைப்படும் மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடத்தைப் பெறுவார்கள். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு ஆண்டின் கடைசிப் பகுதியில் அதாவது செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

2022-ல் நிதி நிலைமை
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமையைப் பொறுத்தவரை, நல்ல ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக திடீர் முன்னேற்றத்தால், வருமானம் அதிகரிக்கும். ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பிறகு காலம் வலுவாக உள்ளதால், இக்காலத்தில் தொழில் ரீதியாக, நண்பர்கள், வாழ்க்கைத் துணைகள் அல்லது தொழில்முறை கூட்டாளிகள் மூலம் செல்வத்தைப் பெறுவீர்கள்.

2022-ல் குடும்ப வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் சகோதரர்களுடன் நன்கு பழகுவார்கள். திருமணமானவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடைபெறலாம். குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் தம்பதிகள் கருத்தரிக்க இந்த ஆண்டு மிகவும் நல்ல காலமாகும். இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மட்டுமல்லாமல், மாமியார்களுடனான உங்கள் உறவையும் மேம்படுத்தும்.

2022-ல் குழந்தைகள்
2022 ஆம் ஆண்டின் ஜாதகத்தின் படி, சிம்ம ராசிக்காரர்களின் குழந்தைகள் கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருப்பார்கள். இந்த ஆண்டில் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அதிக மகிழ்ச்சியைப் பெறவும், அவர்களுடன் நெருக்கமாகவும் நேரத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது. இது குடும்பத்தில் நடக்கும் அனைத்து தவறான புரிதல்களையும் சிறிய மோதல்களையும் சமாளிக்க உதவும். வருடத்தின் ஆரம்பம் குழந்தைகளுக்கு சராசரியாக இருக்கும். குரு 7 ஆவது வீட்டில் இருப்பது, உங்கள் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக இந்த ஆண்டு இரண்டாவது குழந்தைக்கு சாதகமான காலமாகும். ஆண்டின் பிற்பகுதியில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

2022-ல் திருமண வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் உறவில் இருப்பவர்களுக்கு நல்லது, உங்களின் பிணைப்பு வலுவாகும் மற்று தவறான புரிதல்களை சரிசெய்வீர்கள். இக்கால கட்டத்தில் உங்கள் துணையை புரிந்து கொள்வதற்கும், இணைப்பை பலப்படுத்தவும் பல வாய்ப்புக்களைப் பெறும் போது, நீங்கள் ஒரு அழகான பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

2022-ல் வியாபாரம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்கார வியாபாரிகள் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஆண்டின் இரண்டாம் பகுதியில், கூட்டு வணிக உரிமையாளர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். பெரிய முதலீடுகள் கணிசமான ஆபத்தை உள்ளடக்கியிருக்கு. இந்த ஆண்டில் வணிகம் விஷயமாக வெளிநாடு செல்லலாம். பல புதிய வணிக வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன், தங்கம், வெள்ளி அல்லது சொத்துக்களை சரியாக ஆய்வு செய்ய வேண்டும்; இல்லையெனில், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். ஆண்டின் முதல் பாதியில் வணிகத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். சரியான வணிகத் திட்டங்கள் சிறந்த வணிகத்திற்கு வழிவகுக்கும்.

2022-ல் சொத்து மற்றும் வாகனம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சொத்து, வாகனங்கள் தொடர்பாக சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானத்தில் உயர்வு இருக்கும். இது புதிய வாகனத்தில் முதலீடு செய்ய உதவும். குருவின் நிலையால், நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளிகள் ஆகியோரின் உதவியால் நல்ல சொத்துகளைப் பெறுவீர்கள். எந்த ஒரு சொத்தை வாங்கும் அல்லது முதலீடு செய்யும் முன் கவனமாக சிந்தித்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.

2022-ல் ஆரோக்கியம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் இரத்த அழுத்தம், வைரஸ் தொற்று அல்லது அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படலாம். 2022 ஆம் ஆண்டில் பெரிய நோய்கள் அல்லத காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நல்ல உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications











