Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம்
உங்க ராசிப்படி எந்த ராசிக்காரங்கள கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை நரகமாகும் தெரியுமா?
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் முற்றிலும் பொருந்தாத ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்வதுதான்.
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் முற்றிலும் பொருந்தாத ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்வதுதான். உங்களைப் போன்றவர்களை கண்டறிவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் ஒரு துணை அமைவது என்பது உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் பொறுமையை பொறுத்தது.

நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் அல்லது யாருக்காக காத்திருக்கிறீர்கள் என்பது முற்றிலும் உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர்கள் உங்களுக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்களா என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியமானது. திருமண உறவில் நுழையும் முன் அனைத்து வகைகளிலும் சிந்திப்பது நல்லது. குறிப்பாக ஜோதிடத்தை பொறுத்தவரை உங்களுக்கு பொருந்தாத ராசியினருடன் திருமணம் செய்து கொள்ளும்போது அது உங்கள் வாழ்வில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் கடகம்
மேஷம் ஒவ்வொரு கணமும் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க சுற்றி செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு முறை மட்டுமே வாழ்வதை நம்புகிறார்கள், எனவே மற்றவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் எப்போதும் மிகவும் வேடிக்கையாக இருப்பார்கள். இருப்பினும் கடக ராசிக்காரர்கள் நம்பிக்கையை நிலைநாட்டவும் புதிய சூழலுக்கு ஏற்ப மாறவும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவரை நம்பவும், நேரத்தை செலவிடவும் ஒருவரை கண்டுபிடிக்கும் வரை அவர்கள் தனியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் இணையும்போது அது எதிரெதிர் துருவங்கள் இணைந்தது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

மகரம் மற்றும் தனுசு
மகர ராசிக்காரர்கள் மிகவும் பணிசார் எண்ணமுடையவர்கள். அவர்களின் தீர்க்கமான நடத்தை அவர்களை எப்பொழுதும் கூட்டத்திலும் சக்திவாய்ந்தவராக இருக்க அனுமதிக்கிறது. அவர்கள் கடின உழைப்பாளி, லட்சியமானவர்கள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்ட இயல்புடையவர்கள். மறுபுறம் தனுசு, மிகவும் நெகிழ்வான, அழகான மற்றும் யாரையும் தங்கள் மந்திரப் புன்னகையால் கவர்ந்திழுப்பவர்கள். அவர்கள் யாரையும் எளிதில் வசீகரிக்கக் கூடியவர்கள். ஆனால் மகர ராசிக்காரர்கள் இந்த நடத்தைகளை முற்றிலும் வெறுக்கிறார்கள். இதனால் இவர்கள் பொருத்தமில்லாத ஜோடியாகவும், மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

மிதுனம் மற்றும் விருச்சிகம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவலையற்றவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் மிகவும் ஆற்றல்மிக்க சூழலில் தங்க விரும்புகிறார்கள், எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். அதிகம் சிந்திக்கும் அல்லது கவலைப்படுபவர்களில் ஒருவராக அவர்கள் இருக்க விரும்புவதில்லை. மறுபுறம் இது விருச்சிக ராசிக்காரர்களை எரிச்சலடைய வைக்க கூடியதாக இருக்கும். எல்லா நேரத்திலும் தங்கள் துணை எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு எப்போதும் உண்டு. அவர்களின் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தாலோ, அவர்களுடைய துணை அவர்களுடன் இல்லாவிட்டாலோ அவர்கள் பாதுகாப்பாக உணர மாட்டார்கள். இதனால் அவர்கள் நிறைய கவலைப்படுவார்கள். இறுதியில் இது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

சிம்மம் மற்றும் மீனம்
சிம்ம ராசிக்காரர்கள் ஒரு தைரியமான ஆளுமை கொண்டவர்கள், மேலும் அவர்கள் விரும்பும் மற்றும் நெருங்கியவர்களிடம் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையிடமிருந்து அதையே எதிர்பார்க்கிறார்கள், மேலும், தங்கள் துணை மற்றவர்களுக்கு அதிகமாக சாதகமாக இருக்கக்கூடாது என்ற கருத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதாவது அதிக பொஸசிவ் கொண்டவர்களாக இருப்பார்கள். மீன ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்வுகளை நேசிக்ப்பவர்கள். நேரம் தேவைப்படும் போது மற்றவர்களுக்காக அவர்கள் இருக்கவும் தயாராக இருக்கிறார்கள். தங்கள் உலகில் எல்லோரும் இருப்பதை இவர்கள் விரும்புவார்கள், அதே நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் அதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

ரிஷபம் மற்றும் கும்பம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதக்காரர்கள், குறிப்பாக காதல் விஷயங்களில் அதிக பிடிவாதம் கொண்டவர்கள். அவர்கள் காதல் சாகசங்களில் ஈடுபடுவதையும் விரும்புகிறார்கள், மேலும் எந்தவொரு வேலையும் செய்ய தங்கள் கூட்டாளர்களை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் கூட்டாளருடன் கைகோர்த்துச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் இது கும்ப ராசிக்காரர்களுக்கு முற்றிலும் பொருந்தாது. தங்கள் கூட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது தேவைப்படுவதை விட அதிகமாக ஒட்டிக்கொள்வதோ அல்லது அவர்களுடன் இருப்பதோ அவர்களை சலிப்படைய வைக்கும்.

கன்னி மற்றும் துலாம்
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் எதார்த்தமானவர்கள், சர்க்கரை தடவிய பேச்சுக்களை அவர்கள் ஒருபோதும் விருப்ப மாட்டார்கள். அவர்கள் யதார்த்தமான பக்கத்திலிருந்து விலகிச் செல்லமாட்டார்கள், மேலும் அவர்களைப் போலவே நினைக்கும் நபர்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள். மறுபுறம் துலாம் ராசிக்காரர்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள், அன்பும் ஒற்றுமையும் இருக்கும்போது எதுவும் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அவர்கள் சர்க்கரை தடவிய விஷயங்களையும் விரும்புகிறார்கள், இதனால் எல்லோரும் இருட்டாக உணராமல், உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் உணர முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் தொடர்நது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழும்.



Click it and Unblock the Notifications