Latest Updates
-
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா? -
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
இதுவரை தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகள்!
கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தண்ணீருக்காக பல இடங்களில் போர்வெல் என்னும் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகளானது தண்ணீருக்காக 200 அடி முதல் 1000 அடி வரை தோண்டப்பட்டிருக்கும். அவற்றில் பல ஆழ்துளை கிணறுகள் நீர் இல்லாததால் சரியாக மூடப்படாமல் அப்படியே விட்டு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆழ்துளை கிணறுகள் பல குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கும் கிணறுகளாக மாறியுள்ளன. இதுவரை ஆழ்துளை கிணறுகளில் ஏராளமான குழந்தைகள் தவறி விழுந்துள்ளனர்.

அப்படி தவறி விழுந்த பல குழந்தைகளுள் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை விட்டனர். இப்படி ஆழ்துளை கிணறுகள் குழந்தைகளின் உயிரைப் பறிப்பதற்கு முக்கிய காரணம், அதை முறையாக மூடப்படாதது தான்.
கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இங்கு தமிழகத்தில் இதுவரை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

2009 பிப்ரவரி
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஆண்டிப்பட்டிக்கு அருகில் 6 வயது சிறுவனான மாயி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, சுமார் 30 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டான். இருப்பினும் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

2009 ஆகஸ்ட்
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டியில் 3 வயது சிறுவனாக கோபிநாத் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அச்சிறுவனை மீட்பு படையினர் சடலமாகத் தான் மீட்டெடுத்தனர்.

2011 செப்டம்பர்
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்னும் சிறுவன் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழந்து உயிரிழந்தான்.

2012 அக்டோபர்
2012 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தளி அருகில் 3 வயது சிறுவனான குணா 50 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, உயிருடன் மீட்கப்பட்டான்.

2013 ஏப்ரல்
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கரூட் அருகில் முத்துலட்சுமி என்னும் சிறுதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2013 செப்டம்பர்
2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள புலவன்பாடி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுமியான தேவி தவறி விழுந்து உயிரிழந்தார்.

2014 ஏப்ரல் 5
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தைச் சேர்ந்த மதுமிதா அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2014 ஏப்ரல் 14
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து 6 மணிநேர போராட்டத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

2014 ஏப்ரல் 15
அதே வருடம் ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. அந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. 24 மணிநேர போராட்டத்திற்குப் பின், அந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015 ஏப்ரல்
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் 350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் உயிரை இழந்தது.

2018
2018 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் 15 அடி ஆழத்தில் சிக்கி, பல மணிநேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

2019 அக்டோபர்
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்னும் 2 வயது சிறுவனை பல மணிநேரங்களாக மீட்க முயற்சித்தும், அந்த சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது.

குறிப்பு
இப்படி கடந்த 10 வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்ததில், சில குழந்தைகள் உயிருடனும், பல குழந்தைகள் மரணத்தையும் தழுவியுள்ளனர். இதற்கு நமது அரசின் அஜாக்கிரதையே முதன்மையான காரணம் என்று கூறலாம். இவ்வளவு குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய பின்னரும் நமது அரசு ஏதேனும் அதிரடி நடவடிக்கையை உடனே எடுக்குமா?



Click it and Unblock the Notifications











