Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
துலாம் ராசியில் உள்ள கேதுவால் அடுத்த 4 மாதம் இந்த 3 ராசிகளுக்கு வேதனை நிறைந்ததாக இருக்கும்...
கிரகங்களில் நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்கு சென்றார். இந்த துலாம் ராசியில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை இருப்பார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ராசி மாற்றத்தால் சிலருக்கு நற்பலனும், சிலருக்கு மோசமான பலனும் கிடைக்கலாம். கிரகங்களில் நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்கு சென்றார். இந்த துலாம் ராசியில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை இருப்பார். கேதுவின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், 3 ராசிக்காரர்களுக்கு அடுத்த 4 மாதங்கள் வேதனை நிறைந்ததாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பழக விரும்பமாட்டார்கள். இக்காலகட்டத்தில் தந்திரங்களைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தனிமை விரும்பிகள் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவார்கள். இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் அதிருப்தி அடைவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பில்லாத உணர்வைப் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக ஒருசில யோசனைகளை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். ஆனால் வெற்றியை உடனே காண முடியாது என்பதால் இக்காலத்தில் புதிதாக எதையும் செய்வது நல்லதல்ல.

மகரம்
மகர ராசிக்காரர்களின் நற்பெயர் பணியிடத்தில் பாதிக்கப்படும். உங்கள் தொழிலில் அதிக திருப்தி கிடைக்காது. இருப்பினும் தொழில் வாழ்க்கை ஓரளவாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்காது. அவர்கள் உங்களை சந்தேகிப்பார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்க பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது. மொத்தத்தில் இக்காலத்தில் எந்த ஒரு புதிய விஷயத்தை முயற்சித்தாலும், அதில் சாதகமான முடிவுகள் கிடைக்காது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வேலை செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்காது. நெறிமுறையற்ற நிதி ஆதாயங்களுக்குப் பின்னால் ஓடாதீர்கள். ஏனெனில் அவை பெரிய இழப்பைக் கொண்டு வரும். இக்காலத்தில் சில தோல் நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் சிறு விஷயங்களுக்காக உங்கள் மீது அதிக கோபப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications
