For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகை பௌர்ணமி நாளில் ராசிப்படி இந்த பொருட்களை தானம் செய்தால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்குமாம்..

மத நம்பிக்கைகளின் படி, கார்த்திகை பௌர்ணமி நாளன்று தானம் செய்வது ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும். ஆகவே தான் இந்நாளில் ஆடைகள் மற்றும் சில பொருட்கள் ஏழைகளுக்கு தானமாக வழங்கப்படுகின்றன.

|

இந்து மதத்தில் கார்த்தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி நாளில் நீராடுதல் மற்றும் தானம் வழங்குதல் போன்றவை சிறப்பு வாய்ந்தது. இந்து நாட்காட்டியின் படி, கார்த்திகை மாதத்தின் சுக்ல பட்சத்தின் முழு நிலவு கார்த்திக் பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இது திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை பௌர்ணமி நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

Kartik Purnima 2021: Donate These Things According To The Zodiac Sign

மத நம்பிக்கைகளின் படி, கார்த்திகை பௌர்ணமி நாளன்று தானம் செய்வது ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும். ஆகவே தான் இந்நாளில் ஆடைகள் மற்றும் சில பொருட்கள் ஏழைகளுக்கு தானமாக வழங்கப்படுகின்றன. இந்த பௌர்ணமி நாளில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு, பணப் பிரச்சனையும் நீங்கும். மேலும் கார்த்திகை பௌர்ணமி நாளில் தெய்வங்கள் தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. ஆகவே தான் இது தேவ தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது கார்த்திகை பௌர்ணமி நாளன்று ஒவ்வொரு ராசிக்காரரும் என்னென்ன தானம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

கார்த்திகை பௌர்ணமி நாளில் மேஷ ராசிக்காரர்கள் செழிப்புக்காக வெல்லத்தை தானம் செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் பொருளாதார வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கம்பளி ஆடைகளை கார்த்திகை பௌர்ணமி நாளில் தானம் செய்வது நல்லது. இவ்வாறு ஆடைகளை தானம் வழங்குவது வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று பச்சை பாசிப் பயிறை தானமாக வழங்க வேண்டும். இதனால் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில் அரிசியை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மன அமைதி கிடைக்கும் மற்றும் வாழ்க்கையும் செழிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று கோதுமையை தானமாக வழங்குவது நல்லது. இவ்வாறு செய்வது அவர்களின் கௌரவத்தை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

கார்த்திகை பௌர்ணமி நாளில் கன்னி ராசிக்காரர்கள் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று பாயாசத்தை தானம் செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம், புகழ் அதிகரிப்பதோடு, வாழ்க்கையும் செழிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் வெல்லம் மற்றும் பருப்பை தானமாக வழங்க வேண்டும். இதனால் இது வாழ்வில் உள்ள எதிரிகளை அழிக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கோவிலுக்கு சென்று பருப்பை தானமாக வழங்க வேண்டும். ஏனென்றால் இதைச் செய்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவீர்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியைச் சேர்ந்த மக்கள் போர்வையை தானமாக கார்த்திகை பௌர்ணமி நாளில் வழங்குவது நல்லது. இது வேலையில் வரும் எல்லாவிதமான பிரச்சனைகளும் நீங்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் கருப்பு நிற உளுத்தம் பருப்பை தானமாக வழங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வகையான பிரச்சனைகளும் நீங்கும்.

மீனம்

மீனம்

கார்த்திகை பௌர்ணமி நாளில் மீன ராசிக்காரர்கள் மஞ்சள் மற்றும் கடலை மாவால் ஆன இனிப்புகளை தானம் செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kartik Purnima 2021: Donate These Things According To The Zodiac Sign

Donate these things according to the zodiac on Kartik Purnima, the problems of life will go away. Read on.
Story first published: Wednesday, November 17, 2021, 16:48 [IST]
Desktop Bottom Promotion