For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் தீர்ந்து கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? இன்று மறக்காம பைரவரை வணங்குங்க...

|

அஷ்டமி நாட்களில் கலியுகத்தின் தெய்வமான பைரவரை வணங்கி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். சித்திரை மாதம் பரணி, ஐப்பசி மாத பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை நம்பிக்கையுடன் வணங்கினால் கடன் பிரச்சினை தீரும் நோய்கள் தீரும் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

Kalabairava Solve Your Financial Problems

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அஷ்டமி நாளில் அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட பயம் போகும். வியாழக்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

Kalabairava Solve Your Financial Problems

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அஷ்டமியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். அஷ்டமியில் பைரவரை வழிபடுவது நன்மை தரக்கூடியது. கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி, செவ்வரளி மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

சனியின் குருநாதர்

சனியின் குருநாதர்

சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம். பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

எதிரிகள் தொல்லை ஒழியும்

எதிரிகள் தொல்லை ஒழியும்

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

செவ்வரளி மாலை

செவ்வரளி மாலை

செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

கடன் பிரச்சினை தீரும்

கடன் பிரச்சினை தீரும்

பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகபெரிய பிரச்சனையாக அமையக்கூடியது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கி வழிபட கடன் பிரச்சினைகள் தீரும்.

பிள்ளைச் செல்வம் கிடைக்கும்

பிள்ளைச் செல்வம் கிடைக்கும்

தேய்பிறை அஷ்டமி நாளில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளி பூக்கள் கொண்ட மாலை அணிவித்து வணங்க நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

செல்வ வளம் பெருகும்

செல்வ வளம் பெருகும்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

வியாழக்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kalabairava Solve Your Financial Problems

Do you know kalabairava solve your financial problems? Read on to know more...
Story first published: Thursday, December 19, 2019, 13:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more