Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீன ராசியில் உருவாகியுள்ள குரு சுக்கிர சேர்க்கையால் மார்ச் 12 வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்..
ஏற்கனவே மீன ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரனும் மீன ராசிக்கு சென்றதால், அந்த மீன ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது.
Jupiter-Venus Conjunction In Pisces 2023: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றும். கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, கிரக சேர்க்கைகள், கிரக அஸ்தமனம், கிரக உதயம் என்று அதன் நிலைகளில் பல மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படும். அதில் இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக இருக்கும் போது கிரக சேர்க்கை ஏற்படுகிறது. இந்த சேர்க்கையால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகலாம். இந்த யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே மீன ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரனும் மீன ராசிக்கு சென்றதால், அந்த மீன ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இவ்விரு கிரகங்களுமே சுப கிரகங்களாக இருந்தாலும், இரண்டும் எதிரிகளாக கருதப்படுகின்றன. இதனால் இந்த குரு-சுக்கிர சேர்க்கை காலத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த சேர்க்கை காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக உங்களின் வேலையும் பாதிக்கப்படக்கூடும். எனவே ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சிகளை செய்வதோடு, ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் மார்ச் 12 வரை இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் சற்று திமிராக இருப்பீர்கள். உங்களை நீங்கள் சிறந்தவராக நினைத்து திரிவீர்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் நற்பெயரை முழுவதுமாக கெடுத்துவிடும். அலுவலகத்தில் வதந்திகளை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது உங்கள் வேலைக்கு உலை வைத்துவிடும்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கலாம். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். இருப்பினும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வியாபாரத்திலும் சற்று அதிக அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், இக்காலத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் நீங்கள் கொஞ்சம் கடுமையாக பேசுவீர்கள். உங்கள் பேச்சை கவனிக்காவிட்டால், அது உங்களின் பல வேலைகளை பாழாக்கும். இக்குணத்தால் குடும்பத்திலும், அலுவலகத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே எடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
