Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசிக்கு செல்லும் குருவால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் திடீரென்று பணம் வரும்.
Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் மங்களகரமான சுப கிரகம் குரு. இந்த குரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். சொந்த ராசியில் குரு பயணிப்பதால், நிறைய ராசிக்காரர்கள் பல நற்பலன்களைப் பெற்றிருப்பார்கள்.

இந்நிலையில் குரு செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மாறவுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசிக்கு செல்லும் குருவால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் திடீரென்று பணம் வரும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது குரு உருவாக்கும் கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக அற்புதமாக இருக்கப் போகிறது. திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். மேலும் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். ஆனால் ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல பலனைப் பெறுவார்கள். சொத்து மற்றும் வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். அதே சமயம் குருவின் பார்வை 10 ஆவது வீட்டில் விழுவதால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இது வருமான வீடாகும். எனவே இக்காலத்தில் பல வழிகளில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டின் வருமானம் அதிகரிக்கும். இக்காலத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலகட்டத்தில் நல்ல லாபத்தைத் தரும் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications