Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகுது..
குரு பகவான் கடந்த ஆண்டு மீன ராசியில் பயணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 24 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார். ரேவதி நட்சத்திரமானது புதன் ஆளும் நட்சத்திரமாகும்.
Jupiter Entered In Revati Nakshatra: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது ராசி மாற்றத்தினால் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றத்தினாலும் அனைத்து ராசிகளிலும் தாக்கம் காணப்படும். அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆண்டு மீன ராசியில் பயணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 24 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார். ரேவதி நட்சத்திரமானது புதன் ஆளும் நட்சத்திரமாகும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு சென்றிருப்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக குருவின் இந்த நட்சத்திர மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. இப்போது ரேவதி நட்சத்திரத்திற்கு குரு சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
குருவின் நட்சத்திர மாற்றமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. அதுவும் வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். மேலும் பணிபுரிபவர்கள் தங்களின் வேலைகளில் வெற்றியைக் காண்பார்கள். இடமாற்றத்தை விரும்புபவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றமானது நிதி நிலையை மேம்படுத்தும். அதுவும் இந்த ராசிக்காரர்களைத் தேடி பணம் வரும். ஷேர் மார்கெட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் தடைப்பட்ட பணமானது திரும்ப கிடைக்கும். குழந்தைகளின் ஒத்துழைப்பால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நற்பலனைப் பெறுவார்கள். மேலும் பழைய முதலீடுகளில் இருந்து இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்
குருவின் நட்சத்திர மாற்றமானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர்களுக்கு, இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் பணிபுரபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
