For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் 'அயர்ன் லேடி' ஜெயலலிதா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் என்ன தெரியுமா?

1982 ஜூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில், அதிமுக-வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

|

"உங்களால் நான் உங்களுக்கவே நான்" என்று கூறியவர் தமிழகத்தின் அம்மா என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர் இவர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 24). ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களும் அன்போடு இவரை அம்மா என்றே அழைப்பார்கள். தமிழகத்தின் அம்மாவாக, அரசியல் கட்சி தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் , முன்னனி கதாநாயகிகளில் ஒருவராகவும் வளம் வந்தவர் ஜெயலலிதா. இவர் தமிழகத்தின் இரும்பு மங்கை மற்றும் அயன் லேடி என்றும் அழைக்கப்படுகிறார்.

Jayalalithaa Birth Anniversary: Know Interesting Facts About Amma of Tamil Nadu in Tamil

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை ஜெயலலிதாவையே சாரும். பெண்கள் நலன் மேம்பாட்டிற்காக தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி தம்பதிகளுக்கு மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். பெங்களூரில் பள்ளி படிப்பை தொடங்கிய அவர், சென்னைக்கு வந்த பின்னர், பள்ளி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார்.

சினிமா வாழ்க்கை

சினிமா வாழ்க்கை

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனோடு கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 127 படங்கள் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முன்னணி கதாபாத்திரங்களிலும் இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைச்செல்வி' என்ற பட்டத்தை அளித்தார்கள்.

அரசியல் நுழைவு

அரசியல் நுழைவு

1982 ஜூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில், அதிமுக-வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியையும் கவர்ந்தவர் இவர்.

அதிமுகவின் பொதுசெயலாளர்

அதிமுகவின் பொதுசெயலாளர்

எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வர்

ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வர்

1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. முதல்முறையாக ஜெ.ஜெயலலிதா 1991 ஜூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர், தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் முதல்வராக இருந்தார். பின்னர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் 2016 திசம்பர் 5 முதலமைச்சராகப் பணி புரிந்தார்.

தமிழகத்தின் இரும்பு மங்கை

தமிழகத்தின் இரும்பு மங்கை

எம்.ஜி.ஆரின் மறைவை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதாவை, "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். இன்று தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் இவரை அம்மா என்றே அழைக்கின்றனர். தமிழகத்தின் இரும்பு மங்கை மற்றும் அயர்ன் லேடி என்று இவரது தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.

தொட்டில் குழந்தை திட்டம்

தொட்டில் குழந்தை திட்டம்

தொட்டில் குழந்தை திட்டம் என்பது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இவரது 'தொட்டில் குழந்தை திட்டத்துக்காக' ஐக்கிய நாடுகள் சபையில், பாராட்டை பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.

விருதுகளும் சிறப்புகளும்

விருதுகளும் சிறப்புகளும்

ஜெ. ஜெயலலிதா கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு (1972)

சிறப்பு முனைவர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)

தங்க மங்கை விருது - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்

மறைவு

மறைவு

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jayalalithaa Birth Anniversary: Know Interesting Facts About Amma of Tamil Nadu in Tamil

Jayalalithaa Birth Anniversary: Here are the Interesting Facts About Amma of Tamil Nadu in Tamil.
Story first published: Thursday, February 24, 2022, 15:47 [IST]
Desktop Bottom Promotion