For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?

ங்கள் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறப்பாக கிருஷ்ணரை வழிபட்டு வருபவராயின், உங்கள் ராசியின் அடிப்படையில் கிருஷ்ணருக்கு பிரசாதங்களை படையுங்கள். இதனால் கிருஷ்ணரின் முழு அருளையும் பெறலாம்.

|

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது இந்துக்களில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகையாகும். இது பகவான் கிருஷ்ணர் பிறந்த நாளாகும். விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாடு முழுவதும் உள்ள மக்கள் விரதம் இருந்து, கிருஷ்ணருக்கு பலவிதமான பிரசாதங்களை செய்து படைப்பார்கள்.

Janmashtami 2022: What One Should Offer to Lord Krishna As Per Their Zodiac Sign In Tamil

நீங்கள் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறப்பாக கிருஷ்ணரை வழிபட்டு வருபவராயின், உங்கள் ராசியின் அடிப்படையில் கிருஷ்ணருக்கு பிரசாதங்களை படையுங்கள். இதனால் கிருஷ்ணரின் முழு அருளையும் பெறலாம். இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் கிருஷ்ணருக்கு எதை படைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணரை சந்தோஷப்படுத்த, கற்கண்டு மற்றும் மாதுளையை பிரசாதமாக கொடுப்பது நல்லது. மேலும் கிருஷ்ணரை சிவப்பு நிற துணியால் அலங்கரிப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளை நிற பழங்களை கிருஷ்ணருக்கு படைத்து, அவரை மகிழ்விக்கலாம். அதுவும் அவருக்கு பழங்களை படைக்கும் போது தோலுரிக்கப்பட்ட லிச்சி, வாழைப்பழம் போன்ற வெள்ளை நிற பழங்களை படைக்க வேண்டும். இது தவிர, தேங்காய் லட்டு மற்றும் பிற வெள்ளை நிற இனிப்புக்களையும் கிருஷ்ணருக்கு படைக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் மற்றும் புதனுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணருக்கு பச்சை நிற பொருட்களை காணிக்கையாக வழங்கலாம். மேலும் கிருஷ்ணரை பச்சை நிற ஆடைகள், இலைகள் மற்றும் மயில் இறகு கொண்டும் அலங்கரிக்கலாம். இது தவிர பச்சை நிற பழங்களையும் கிருஷ்ணருக்கு வழங்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் வெள்ளை நிறத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பால், வெண்ணெய், வாழைப்பழம் போன்ற வெள்ளை நிற பொருட்களை வழங்குவது நல்லது. மேலும் இவர்கள் வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களால் கிருஷ்ணரை அலங்கரிக்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சிவப்பு நிற பழங்கள், பூக்கள் மற்றும் ஆடைகளை கிருஷ்ணருக்கு கொடுப்பது நல்லது. ஆப்பிள், மாதுளை போன்றவற்றைப் பயன்படுத்தி இனிப்புக்களை தயாரித்தும் கொடுக்கலாம். நெய்யை கூட கிருஷ்ணருக்கு கொடுக்கலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு பச்சை நிற பொருட்களை பிரசாதமாக வழங்க வேண்டும். உதாரணமாக, பச்சை நிற ஆடைகள், பச்சை நிற பழங்கள் போன்றவற்றை வழங்கலாம். இது தவிர கிருஷ்ணருக்கு பேடா என்னும் இனிப்பையும் வழங்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு வெள்ளை நிற ஆடைகள் மற்றும் பிற வெள்ளை நிற பொருட்களை படைக்கலாம். உதாரணமாக, வெள்ளை நிற இனிப்புகள், வெண்ணெய், தயிர், நெய் போன்றவற்றை வழங்கலாம். இதனால் கிருஷ்ணரின் முழு ஆசியை பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, கிருஷ்ணருக்கு ஆப்பிள், மாதுளை, தர்பூசணி போன்ற சிவப்பு நிற பழங்கள் மற்றும் பூக்களை வழங்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் பூக்களை வழங்க வேண்டும். வேண்டுமானால் மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் பானங்களையும் கிருஷ்ணருக்கு பிரசாதமாக படைக்கலாம். மேலும் சந்தன பேஸ்ட் கொண்டு கிருஷ்ணரின் சிலையை அலங்கரிக்கலாம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கிருஷ்ண ஜெயந்தி அன்று அணிய வேண்டும். மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது, அவருக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பலகாரங்கள் மற்றும் பழங்களை படைக்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் அருளைப் பெற முயற்சித்தால், கிருஷ்ண ஜெயந்தி அன்று நீல நிற ஆடைகளால் கிருஷ்ணரை அலங்கரிப்பது நல்லது. மேலும் கிருஷ்ணருக்கு தயிர் மற்றும் பலுஷாஹி வழங்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று நல்ல சுவையான பழங்களை கிருஷ்ணருக்கு படைப்பதன் மூலம், வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும், அமைதியையும் பெறலாம். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதுடன், மஞ்சள் நிற இனிப்புக்களை கிருஷ்ணருக்கு படைப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Janmashtami 2022: What One Should Offer to Lord Krishna As Per Their Zodiac Sign In Tamil

Janmashtami is a festival that is celebrated with dedication and devotion across India. On this day, people celebrate the birth anniversary of Lord Krishna. This year it will be observed on 18 and 19 August 2022. You can offer these things to Lord Krishna.
Story first published: Tuesday, August 16, 2022, 18:01 [IST]
Desktop Bottom Promotion