Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிறப்பு யோகம் உருவாகி வருவதால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேர்வதோடு, முன்னேற்றத்திற்கான பாதையும் திறக்கப்படும்.
இந்துக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தான் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி. புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் வரும் முதல் அஷ்டமி திதியில் பிறந்தார். கிருஷ்ணர் பிறந்த நாள் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பகவான் கிருஷ்ணர் குழந்தையாக வணங்கப்படுகிறார். இந்நாளில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுவார்கள்.

நம்பிக்கைகளின் படி, கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுவதால் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். மேலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரம் போன்ற அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிறப்பு யோகம் உருவாகி வருவதால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேர்வதோடு, முன்னேற்றத்திற்கான பாதையும் திறக்கப்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 கிருஷ்ண ஜெயந்தி எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியானது ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 கிருஷ்ண ஜெயந்தியானது ஆகஸ்ட் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 18 ஆம் தேதி நள்ளிரவு 1.49 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு 2.47 மணி வரை உள்ளது. இக்காலத்தில் துருவ யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு மங்களகரமான யோகமாகும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பூஜைக்கான நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஆகும். கெளரி நல்ல நேரம் நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை ஆகும். ஆனால் கிருஷ்ணர் இரவில் பிறந்ததால், வட இந்தியர்கள் இரவு நேரத்தில் பூஜை செய்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யக்கூடாதவைகள்:
* கிருஷ்ண ஜெயந்தி அன்று யாரையும் அவமதிக்கக்கூடாது அல்லது கெட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடாது. முக்கியமாக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசாதீர்கள்.
* கிருஷ்ண ஜெயந்தி நாளில் கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள்.
* கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் போது லட்டுகளை கிருஷ்ணருக்கு படைத்தால், அத்துடன் துளசியையும் கண்டிப்பாக படைக்க வேண்டும்.
* கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் இரவு 12 மணி வரை விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவரை உணவு உட்கொள்ளக் கூடாது.
* கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்டிப்பாக பசுக்களை வணங்க வேண்டும்.
இப்போது கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் கிருஷ்ணரின் அருளால் வெற்றிகரமாக முடிக்கப்படும். மனம் அமைதியாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் அதிக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்நாள் சிறப்பாக இருக்கும். மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று விருச்சிக ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் நல்ல முடிவுகளை பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications