Latest Updates
-
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்.. -
'கடல்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கடல் எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க.. -
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்த 6 உணவுகளை எப்பவுமே வெறுக்காதீங்க.. கூறும் டாக்டர்! எதுக்குன்னு பாருங்க..
உங்க வீட்ல பல்லியை இந்த மாதிரி பார்த்தால் பிரச்சனை வரப்போகுதுன்னு அர்த்தம் தெரியுமா?
வீட்டில் பல்லி இருந்தால், எப்போதும் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தைப் பராமரிக்கிறது. அதோடு வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது.
நம் அனைவரது வீட்டின் சுவரிலும் இருக்கும் ஓர் விலங்கு தான் பல்லி. இந்த பல்லி பார்ப்பதற்கு பலருக்கு அருவருப்பான உணர்வைத் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் பல்லி லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது என்பது தெரியுமா? மேலும் நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போது பல்லி சப்தமிட்டால் அது நல்ல ஒரு சகுனமாக கருதப்படுகிறது. இது தவிர கோவில் மற்றும் வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால், அது மிகவும் நல்ல அறிகுறியாகவும் நம்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி, வீட்டில் பல்லி இருந்தால், எப்போதும் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தைப் பராமரிக்கிறது. அதோடு வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட பல்லியை எங்கு கண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும், எங்கு கண்டால் பிரச்சனை வரும் என்பதைப் பற்றி இப்போது காண்போம்.

எந்நாளில் பல்லியைக் காண்பது நல்லது?
சாஸ்திரத்தின் படி, பல்லியை குறிப்பிட்ட நாளில் காண்பது மங்களகரமானதாக கூறப்படுகிறது. அதுவும் தீபாவளி பண்டிகை அன்று இரவில் வீட்டில் பல்லியைப் பார்த்தால், அது மிகவும் நல்ல அறிகுறி. ஏனெனில் பல்லி லட்சுமி தேவியைக் குறிக்கிறது. எனவே தீபாவளி அன்று வீட்டில் புதிதாக பல்லியைக் கண்டால், அது வீட்டிற்கு லட்சுமி தேவி வருவதைச் சுட்டிக் காட்டுகிறது என்று நம்பப்படுகிறது.

புதிய வீட்டில் பல்லி
புதிய வீட்டில் அல்லது வீட்டிற்குள் நுழையும் போது பல்லியைக் கண்டால், அது முன்னோர் அல்லது தாய், தந்தையின் வருகையைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இது தங்களை ஆசீர்வதிக்க முன்னோர் அல்லது தாய், தந்தை பல்லியாக தோன்றி வந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் போது, பல்லி இறந்து அல்லது மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டால், அது ஒரு கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.

கனவில் பல்லி
ஒருவரது கனவில் பல்லியுடன் சண்டையிடுவதைக் காண்பது வேறுபாடுகளைக் காட்டுகிறது. மறுபுறம், கனவில் பல்லியைப் பிடிக்க முயன்று, அவை பயந்து ஓடுவது போன்று தோன்றினால், அது நல்ல அறிகுறி. இதன் பொருள் நீங்கள் விரைவில் நல்ல செய்தியைப் பெறப்போகிறீர்கள் மற்றும் பண மழையில் நனையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

பல்லி சண்டை
வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லிகள் சண்டையிடுவதைக் கண்டால், அது ஒரு வீட்டுப் பிரச்சனையைக் குறிக்கிறது. பல்லிகளுக்கு இடையே ஏற்படும் சண்டை, வீட்டில் உள்ளவர்களிடையே ஒற்றுமையின்மையைக் காட்டுவதோடு, காரணமின்றி வீட்டில் சண்டைகள் தொடங்க போவதையும் குறிக்கிறது. எனவே உஷாராகிக் கொள்ளுங்கள்.

வீட்டின் தரையில் பல்லி நடப்பது
உங்கள் வீட்டின் தரையில் மீண்டும் மீண்டும் பல்லி நடமாடுகிறதா? அப்படியானால் அது பூகம்பம் அல்லது புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளைக் குறிக்கிறது. இது தவிர, வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படப் போவதையும் இது குறிக்கிறது.



Click it and Unblock the Notifications
