Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உங்களின் இந்த செயல்கள் உங்களை முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாக்கும்... இதனால் பல துன்பங்கள் வரலாம்...!
இந்து மதத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது என்பது புராண காலங்களில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சடங்காகும்.
இந்து மதத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது என்பது புராண காலங்களில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சடங்காகும். இராமாயணத்தில் தசரதரருக்கு இராமர் திதி கொடுக்கும்போது இராவணனே புரோகிதராக வந்து சடங்குகளை செய்ததாக ஒரு நிகழ்வு இருக்கும். இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்பது இந்து மதத்தின் மிகமுக்கியமான சடங்குகளில் ஒன்றாகும்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பது உங்களின் இறந்த முன்னோர்கள் இன்னும் குடும்பத்தின் இன்றியமையாத பகுதியாக இருப்பதாகவும், ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வழியாகவும் உள்ளது. மன்னிப்பு கோருவதற்கும், முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறுவதற்கும் ஒரு வழியாக இந்த வழக்கம் வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சடங்கின் போது செய்யப்படும் சில தவறுகள் மூதாதையர்களை கோபப்படுத்தி பித்ரு தோஷத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் விதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பித்ரு தோஷத்தின் விளைவுகள்
சில நேரங்களில் நேர்மையான மற்றும் கடின உழைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் நேர்மறையான முடிவுகளை பெற தவறிவிடுகிறோம் மற்றும் தவிர்க்க முடியாத தடைகளை எதிர்கொள்கிறோம், இது பித்ரு தோஷத்தின் விளைவாக இருக்கலாம்.

கர்ம கடன்
இத்தகைய கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது, நமது தற்போதைய அல்லது கடந்தகால வாழ்க்கையில் என்ன தவறு நடந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைக்கிறது. இது உங்களின் கர்ம கடன் அல்லது பித்ரு தோஷத்தின் விளைவாக இருக்கலாம்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
நம் முன்னோர்களை கோபப்படுத்துவதையோ அல்லது அவர்களின் சாபத்தை தவிர்ப்பதற்காக, பித்ரு பக்ஷ காலத்தில் திதி சடங்குகளின் விவரங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்து நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த சடங்கில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்
நீங்கள் எழுந்த நேரத்திலிருந்தே, பூஜை சடங்குகள், புதிய பொருட்களை வாங்குவதற்கான நேரம், சாப்பிடும் நேரம் என எல்லாவற்றிற்கும் சிறிய மாற்றம் தேவை. பித்ரு பக்ஷாவின் போது, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஒருவர் கடைபிடிக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
வெங்காயம், பூண்டு போன்ற உண்ணக்கூடிய பொருட்கள் 'டமாசிக்' என்று நம்பப்படுவதாக இந்து சாஸ்திரங்கள் விளக்கியுள்ளன, இது நம் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும். பித்ரு பக்ஷ காலத்தில், இந்த இரண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கொண்டாட்டங்கள் கூடாது
ஒருவர் எதையும் கொண்டாடுவதிலிருந்தோ அல்லது பண்டிகைகளின் ஒரு பகுதியாக இருப்பதிலிருந்தோ விலகி இருக்க வேண்டும். சடங்கு செய்பவர் மனதை சமநிலையாக வைத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கொண்டாட்டம், விருந்து அல்லது பண்டிகையை கொண்டாடுவது உங்கள் மூதாதையர்களிடம் உங்களுக்கு மரியாதை என்பதை குறிக்கிறது.

புதிதாக எதையும் தொடங்கக்கூடாது
இந்த காலம் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதால், புதிதாக எதையும் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களால் புதியதாக எதுவும் வாங்கப்படக்கூடாது மற்றும் நல்ல செய்திகளை வெளியே சொல்லக்கூடாது. இந்த காலகட்டம் முடிந்தவுடன் நல்ல செய்திகளை வெளியே கூறலாம்.

மது மற்றும் இறைச்சி கூடாது
இந்த காலம் முன்னோர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, எனவே ஒருவர் மது அல்லது அசைவ உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வழக்கத்தை பின்பற்றாதது முன்னோர்களின் கோபத்தைத் தூண்டும். நீங்கள் திடீர் சிரமங்களையும் விவரிக்க முடியாத தோல்விகளையும் சந்திக்க நேரிடும்.

பாலியல் உறவு கூடாது
இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதை சாஸ்திரங்கள் கண்டிப்பாக தடைசெய்கின்றன. திதி சடங்குகள் செய்யப்படுவதால், மத ரீதியாகவும், தூய்மையற்ற மனதிலும் எண்ணங்களிலும் மூதாதையரின் ஆசீர்வாதங்களை கோபமாக மாற்றக்கூடும்.



Click it and Unblock the Notifications
