Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க வீட்டுல பணப் பிரச்சனை குறையணுமா? அப்ப வாஸ்துப்படி 'இத' செய்யுங்க...
ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நம் வாழ்வில் பணம் ஒரு முக்கிய அங்கமாகும். நாம் அனைவருமே இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு தான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தால் தான் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தில் உருவாக்க முடியும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் ஒருவரது வீட்டில் சேராமல் இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் இது அனைவருக்குமே மன வேதனையைத் தரும். ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தைக் குறிக்கும் 3 பகுதிகள் உள்ளன. அதில் ஒன்று குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு பகுதி. இரண்டாவது தென்கிழக்கு பகுதி. இது பணப்புழக்கத்தை நிர்வகிப்பதால் முக்கியமானது. மூன்றாவது வடகிழக்கு பகுதி. இது செழிப்பு, செல்வம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டு வரும் பகுதியாகும். இந்த மூன்று பகுதிகளைக் கொண்டு ஒருவரது வீட்டில் உள்ள பணப்பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது அது எப்படி என்பதைக் காண்போம்.

வடக்கு
வடக்கு பகுதியானது புதனால் ஆளப்படுகிறது. புதனின் நிறம் பச்சை. எனவே வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற பெயிண்ட், பச்சை நிற வால்பேப்பர் ஆகியவற்றை வைப்பதன் மூலம், வீட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம். வேண்டுமானால் இந்த பகுதியில் மணி பிளாண்ட் அல்லது நீரூற்று அமைக்கலாம். ஆனால் அந்த நீரூற்றானது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் மிகவும் பெரிய அளவில் இருக்கக்கூடாது. மேலும் வடக்கு பகுதியில் கண்ணாடியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஆற்றலை அதிகரித்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். வேண்டுமெனில் புதன் யந்திரத்தை வடக்கு பகுதியில் வைக்கலாம்.
இது தவிர வடக்கு பகுதியில், ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதில் 3 நாணயங்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும். பின் அந்த கலசத்தில் உள்ள நீரை 2-3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள்.

தென்கிழக்கு
தென்கிழக்கு பகுதியானது சுக்கிரனால் ஆளப்படுகிறது. வீட்டில் பணப் பிரச்சனை இருக்கும் போது, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சுக்கிர யந்திரத்தை வைத்தால், அது அந்த வீட்டில் பணம், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும். இது தவிர இந்த திசையில் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் சிவப்பு நிற பல்பை அந்த இடத்தில் வைக்கலாம். இது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

வடகிழக்கு
வடகிழக்கு பகுதி குருவால் ஆளப்படுகிறது. எனவே வீட்டின் வடகிழக்கு பகுதியை எப்போதும் சுத்தமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திசையில் உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைக்காதீர்கள். மேலும் இந்த திசையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கண்ணாடியை வையுங்கள். குரு பகவான் ஆளும் திசை என்பதால் இந்த பகுதியில் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் இந்த பகுதியில் குரு யந்திரத்தை வைக்கலாம்.



Click it and Unblock the Notifications