For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்...!

உலகத்தில் இருக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் மக்கள் ஏதாவது ஒருவகை ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஜாதகமும், நாடி ஜோதிடமும் அதிக மக்கள் நம்புபவையாக இருக்க

|

உலகத்தில் இருக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் மக்கள் ஏதாவது ஒருவகை ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஜாதகமும், நாடி ஜோதிடமும் அதிக மக்கள் நம்புபவையாக இருக்கிறது. மற்ற கலாச்சாரங்களில் மக்கள் அவர்கள் பிறந்த மாதத்திற்கும், பருவக்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

How does the season of your birth affects your personality

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் பிறந்த பருவக்காலத்திற்கும், அவர்களின் ஆளுமைக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிறக்கும் நேரத்தில் இருக்கும் வானிலை ஒருவரின் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு முடிவு செய்தது. இந்த பதிவில் எந்தெந்த பருவகாலத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன்கள்

ஹார்மோன்கள்

ஒருவர் பிறக்கும் போது, மூளையில் இருக்கும் நரம்பியக்கடத்திகள் வானிலையால் பாதிக்கப்படுகிறது. இந்த தாக்கம் அவர்கள் முதிர்வயதை அடையும்வரை அப்படியே தக்கவைத்துக் கொள்வார்கள். இந்த வகையில் நீங்கள் பிறக்கும்போது இருக்கும் பருவகாலம் உங்கள் ஆளுமையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கோடைகால குழந்தை

கோடைகால குழந்தை

கோடைகாலத்தில் பிறந்த குழந்தைகள் அந்த பருவக்காலத்திற்கு ஏற்ப போலவே வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் எரிமலை போல இருப்பார்கள். இவர்கள் எப்பொழுது திடீரென கோபப்படுவார்கள் என்று இவர்களுக்கேத் தெரியாது. அதேபோல நேர்மறையாக பார்க்கும்போது இவர்கள் ஆற்றலில் சூரியனுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்யக்கூடியவராக இருப்பார்கள். வேலைகளை பொறுத்தவரை இவர்கள் எப்பொழுதும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

குளிர்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகள் அமைதியானவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழக்கூடியவர்கள், பொதுவாக இவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் அவ்வளவாக கோபப்பட மாட்டார்கள், ஒருவேளை கோபப்பட்டாலும் உடனடியாக சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

MOST READ: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இவங்ககிட்டகொஞ்சம் உஷாராவே இருங்க...!

வசந்த காலம்

வசந்த காலம்

இந்த பருவக்காலத்தில் பிறந்தவர்கள் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தங்களின் சிறப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் அமைதியானவர்கள், இனிமையானவர்கள், அனைவருக்கும் உதவக்கூடியவர்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் இவர்களின் தேவையானது காற்றைப் போல இருக்கும். இவர்களுக்கு சோம்பேறித்தனமாக இருப்பது பிடிக்காது. ஒவ்வொரு நாளையும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவக் கிடைக்கும் வாய்ப்பகத்தான் பார்க்கிறார்கள்.

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்

இலையுதிர் கால குழந்தைகள் இயற்கையிலேயே மிகவும் நட்பாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் நண்பர்களை உருவாக்குவதில் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். வேலையை பொறுத்தவரை இவர்கள் அதிக கற்பனைத்திறனுடன் இருப்பார்கள். நீங்கள் பிறந்த நேரம் உங்களின் ஆளுமையை எப்படி பாதிக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிகாலை 4-8

அதிகாலை 4-8

அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பிறந்தவர்கள் சீரானவர்கள் மற்றும் மிகவும் கடின உழைப்பாளிகள். இவர்களை மற்றவர்கள் ஊக்குவிக்கும் போது சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.

MOST READ: இந்த காய்கறிங்கள அதிகம் சாப்பிடறது உங்க ஆயுளை குறைக்குமாம் தெரியுமா?

8 மணி - நண்பகல்

8 மணி - நண்பகல்

இவர்கள் எப்பொழுதும் நம்பிக்கை உள்ளவர்கள், அனைவரிடமும் இருக்கும் நல்ல குணத்தை பார்ப்பார்கள். அவர்கள் இயற்கையான தலைவர்கள், ஆனால் சில சமயங்களில் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் கனவில் தங்கள் சுயத்தை இழப்பவர்கள்.

நன்பகல் - 4 மணி

நன்பகல் - 4 மணி

இவர்கள் ஆற்றலின் வடிவமாக இருப்பார்கள், இயற்கையாகவே அதிக படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படுவார்கள்.

4 மணி - 8 மணி

4 மணி - 8 மணி

இவர்கள் சமூகக் கிளர்ச்சியாளர்களாக இருப்பார்கள், மேலும் விதிமுறைகளை பின்பற்றுவதை வெறுப்பார்கள். குறைவான பயணத்தை செய்து சிறந்த கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களாக உருவாகுவார்கள். இவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழ்வார்கள்.

8 மணி - நள்ளிரவு

8 மணி - நள்ளிரவு

இவர்கள் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள், எப்போதும் தங்களின் சுயத்தை இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும், மேலும் இவர்கள் ஆழமான சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

MOST READ: இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...!

நள்ளிரவு - அதிகாலை 4

நள்ளிரவு - அதிகாலை 4

இவர்கள் அதிக கனவு காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் சொந்த உலகத்தில் வாழ்பவர்கள், எனவே இவர்கள் எதார்த்த உலகத்தில் இருந்து எப்போதும் விலகி இருப்பார்கள். இவர்களுக்கு இசை மற்றும் கவிதையில் நல்ல எதிர்காலம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How does the season of your birth affects your personality

Read to know how does the season of your birth affects your personality.
Story first published: Tuesday, October 1, 2019, 16:26 [IST]
Desktop Bottom Promotion