For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி திட்டத்தின் உங்களுக்கான சான்றிதழை எப்படி டவுன்லோட் செய்யணும் தெரியுமா?

ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மூலம் இந்திய குடிமக்கள் திரங்காவை அதாவது நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும்.

|

ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மூலம் இந்திய குடிமக்கள் திரங்காவை அதாவது நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 76-வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் அதை ஏற்றவும் ஊக்குவிக்கும் ஒரு பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

Har Ghar Tiranga Campaign: Steps To Pin A Flag And Download The Certificate

சுதந்திரத்தின் 76-வது ஆண்டில் மூவர்ணக் கொடியை நமது வீட்டிற்கு கொண்டு வருவது, திரங்காவுடனான தனிப்பட்ட தொடர்பை மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. மக்களின் இதயங்களில் தேசபக்தியை விதைப்பதும், இந்திய தேசியக்கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். மேலும் நமது சமூக ஊடகங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹர் கர் திரங்காவில் பங்கேற்பது எப்படி?

ஹர் கர் திரங்காவில் பங்கேற்பது எப்படி?

நீங்கள் ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) பிரச்சாரத்தில் பங்கேற்கிறீர்கள் என்றால், உங்கள் புகைப்படங்களை இணையதளத்தில் இடம்பெற harghartiranga.com இல் பதிவேற்றலாம். பிரச்சாரத்திற்கு பதிவு செய்வதன் மூலம், நீங்கள் ஹர் கர் திரங்கா சான்றிதழைப் பெறலாம்.

கொடியைப் பொருத்தி சான்றிதழைப் பதிவிறக்குவது எப்படி?

கொடியைப் பொருத்தி சான்றிதழைப் பதிவிறக்குவது எப்படி?

Step 1: hargartiranga.com லிங்கை ஓபன் செய்யவும்.

Step 2: இரண்டு முக்கிய விருப்பங்கள் இருக்கும்: "Pin A Flag" மற்றும் "Upload selfie with flag."

Step 3: "Pin a flag" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

Step 4: உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணின் விவரங்களை நிரப்ப ஒரு பக்கம் திறக்கும்.

Step 5: இருப்பிட அணுகலைக் கேட்கும் பாப்-அப்பில் "ஆம்" என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 6: உங்கள் ஜிமெயில் கணக்கு வழியாக உள்நுழைவதற்கான விருப்பமும் இருக்கும்.

Step 7: உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, Next என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 8: வரைபடத்திலிருந்து உங்கள் தற்போதைய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Step 9: தேர்ந்தெடுத்த பிறகு "Pin A Flag" என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 10: உங்கள் கொடி பின் செய்யப்பட்டதாக வாழ்த்துச் செய்தியைப் பெறுவீர்கள்.

Step 11: செய்தியின் கீழே, சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் இருக்கும்.

Step 12: பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்யவும். Facebook, LinkedIn, Twitter மற்றும் Whatsapp போன்ற ஊடக தளங்களில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பகிரலாம்.

கொடியுடன் செல்ஃபியை பதிவேற்றுவதற்கான படிகள்

கொடியுடன் செல்ஃபியை பதிவேற்றுவதற்கான படிகள்

Step 1: "Upload selfie with flag" என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 2: உங்கள் பெயரைச் சேர்த்து, செல்ஃபியைப் பதிவேற்றவும்.

Step 3: "Submit" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதுவரை, இருபது மில்லியனுக்கும் அதிகமான கொடிகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மூவர்ணக் கொடியுடன் செல்ஃபிகள் போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Har Ghar Tiranga Campaign: Steps To Pin A Flag And Download The Certificate

Har Ghar Tiranga is a campaign organised by Azadi Ka Amrit Mahotsav to encourage the citizens of India to bring our national flag to their homes and hoist it to commemorate India's 76th year of independence.
Desktop Bottom Promotion