Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Happy Ramadan 2026 Wishes : ரம்ஜான் அன்னைக்கு உங்க இஸ்லாமிய நண்பர்களுக்கு 'இத' சொல்ல மறந்துடாதீங்க...!
Happy Ramadan 2026: ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை மேற்கொள்கிறார்கள். ஆண்டிற்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியோடு ரமலான் நோன்பு நிறைவடைகிறது. இஸ்லாம் நண்பர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்த்துக்கள்!

வாழ்த்து 5
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட... இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உங்களுடைய எல்லா தேவைகளையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக... இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்!
வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
