Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
Guru Peyarchi 2022: 12 ஆண்டுகளுக்கு பின் மீனம் செல்லும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார்?
நவகிரகங்களில் மிகப்பெரிய மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான மீன ராசிக்கு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 11.23 மணிக்கு செல்லவிருக்கிறார்.
நவகிரகங்களில் மிகப்பெரிய மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான மீன ராசிக்கு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 11.23 மணிக்கு செல்லவிருக்கிறார். கல்வி, திருமணம், குழந்தைகள், அதிர்ஷ்டம், செல்வம், பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றிற்கு காரணமானவர் தான் குரு. ஒருவரது ஜாதகத்தில் குருவின் பலம், அந்நபரின் உள்ளுணர்வு, மரியாதை, நற்பெயர் போன்றவற்றை வரையறுக்கிறது.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற ஒரு வருடம் ஆகும். இது ஒரு முக்கியமான கிரகம் என்பதால், இதன் பெயர்ச்சி வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குருவின் ஆசீர்வாதமும், அருளும் இல்லாமல் எந்த சுபகாரியமும் நடக்காது என்பதால், ஒருவரது வாழ்க்கையில் எந்தவொரு சுப நிகழ்வுகளையும் உருவாக்க இது மிக முக்கியமான கிரகமாகும். இப்படிப்பட்ட குரு தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார். இப்போது குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலம் பல வழிகளில் சிறப்பாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் நிலம் அல்லது வீடு வாகனத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வருமானம் பெருகுவது மட்டுமின்றி, நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். காதல் விஷயங்களில் தீவிரமாக இருப்பீர்கள். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை யோகம் உண்டு.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் முடிவடைவது மட்டுமின்றி, ஏதேனும் அரசு டெண்டருக்கு விண்ணப்பித்தால், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். தேர்தல் தொடர்பாக எடுக்கும் எந்த முடிவுகளும் வெற்றியைத் தரும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் மட்டுமின்றி, எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும், அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் தீவிரமாக பங்கேற்பதோடு, அதிக தொண்டும் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சொந்தக்காரர்கள் தொடர்ந்து சதி செய்வார்கள். இருப்பினும் அனைத்தையும் முறியடித்து, வெற்றி பெறுவீர்கள். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். காதல் விஷயங்களிலும் அலட்சியமாக இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் பல இன்ப அதிர்ச்சிகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். மாமனார்-மாமியார் தரப்பில் இருந்து ஆதரவு இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்ய விரும்பினால், அதற்கு குரு சாதகமாக இருந்து நற்பலனை வழங்குவார். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் குருவினால் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் ரகசிய எதிரிகள் நிறைய இருப்பார்கள். உங்களின் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள் ஆனால் அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். இருப்பினும் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாய்வழியில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையைத் தொடங்க நினைத்தாலும், ஒப்பந்தம் போட்டாலும், வேலை மாற நினைத்தாலும், எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும். புது தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் கூடும். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பணியிடத்தில் எதிர்பாராத பல முடிவுகளைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நீங்கள் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கல்விப் பணிகளில் முழு வெற்றி பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்ப முரண்பாடு மற்றும் மனக் குழப்பத்தை சந்திக்க நேரிடும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் குரு பகவான் உங்களுக்கு நிறைய தைரியத்தையும், ஆற்றலையும் வழங்குவார். குடும்பத்தில் இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முடிவுகளும் செயல்களும் பாராட்டப்படும். சமூக அந்தஸ்தும் உயரும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். தைரியமான இயல்பினால், மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாகக் கட்டுப்படுத்துவீர்கள். பயணங்களால் நற்பலன் கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குழந்தை தொடர்பான கவலைகளும் நீங்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீண்ட காலமாக செய்ய நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் மற்றும் தங்க நகைகள் போன்ற பொருட்களை வாங்க அதிக பணம் செலவழிப்பீர்கள். உங்களின் பேச்சுத் திறமையின் மூலம் எந்தச் சூழலையும் எளிதாகக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் ஒரு முழுமையான வரப்பிரசாதமாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பீர்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், முடிவெடுப்பதில் தாமதிக்காதீர்கள். ஏனெனில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான கவலைகளும் விலகும். காதல் விஷயங்களில் தீவிரமாக இருப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு.



Click it and Unblock the Notifications











