Latest Updates
-
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா? -
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசிக்காரர்கள்!
குரு பகவான் முழு சுபகிரகம். விருச்சிக ராசியில் இருக்கும் குரு பகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய
குரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரும் குருபகவான் ஒருவருக்கு பணம், பதவி, பட்டம் புகழ், உயர் கல்வி, குழந்தை பாக்கியம், ஞானம் ஆகியவற்றை வழங்குகிறார். குரு பார்த்தாலே அந்த இடம் சுபிட்சமாகும். நமக்கு குரு பலனும் வரும்.
குரு பகவான் இந்த முறை மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆசிய ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற யோகங்களையும் பலன்களையும் தரப்போகிறார். அதற்காக மற்ற ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வருமா என்று பயப்பட வேண்டாம். குரு தனது சொந்த வீட்டில் அமர்வதால் யாருக்கும் இந்த முறை பாதிப்பு வராது நன்மைதான் ஏற்படும்.

குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார். கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமடைகிறார். மேஷம், சிம்மம், கடகம், விருச்சிகம் ராசிகள் குருவிற்கு நட்பு வீடு. ரிஷபம் மிதுனம், கன்னி, துலாம் குருவிற்கு பகை வீடுகள். குரு பகவான் சந்திரன் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார். சனியின் வீடான மகரத்தில் நீசமடைகிறார். தனுசு, மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்த முறை குருபகவான் தனது நட்பு வீடான விருச்சிகம் ராசியில் இருந்து தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார்.
குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை குரு பெயர்ச்சி அவரது ராசியான தனுசு ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மைதான் நடக்கப்போகிறது. குரு பகவானால் சில யோகங்களும் அதனால் நன்மைகளும் ஏற்படுகின்றன. அதிகம் நன்மை அடையப்போவது மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு யோகங்கள் கிடைக்கப் போகின்றன.
குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுனம் ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்மம் ராசியை பார்க்கிறார். இந்த முன்று ராசிகளைத்தவிர கும்ப ராசிக்கு லாப குருவும், விருச்சிக ராசிக்கு குடும்ப குருவும் குதூகலத்தை தரப்போகின்றனர்.

மேஷம்
ஒன்பதில் குரு ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு. மேஷம் ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்திற்கும் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது அதை அனுபவிக்க தயாராக இருங்கள். அது தவிர குருபகவான் ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியை பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கப் போகிறது. குருவினால் கிடைக்கும் பலனை திகட்ட திகட்ட அனுபவிக்க தயாராகுங்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு குரு பார்வை ஏழாம் பார்வையாக நேரடியாக விழுகிறது. ஏழில் குரு வந்தால் நேரடியாக ராசியை பார்ப்பார். கடன்கள் அடையும். கேட்கிற வரம் கிடைக்கும். குருவின் நேரடி பார்வை விழுவதால் ஆசைகள் நிறைவேறும். தடைகள் நீங்கும். மன திருப்தியாக இருப்பீர்கள். முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையால் பெரியவர்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் கிடைக்கும். வேண்டிய வரங்களை கடவுள் கொடுப்பார். பணவரவும் லாபங்களும் கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் அமரும் குருபகவான் பூர்வ புண்ணிய பலன்களை அள்ளித்தரப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியினால் மிதமிஞ்சிய பலன் கிடைக்கும். எதிர்பார்ப்பு அதிகமாகவே நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் வரும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது. எதுவுமே நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தால் நமக்கு அதிக லாபம்தான். அப்படித்தான் இந்த குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது. காரணம் குரு தனது ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசிக்காரர்களை பார்க்கிறார். ஐந்தாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், குரு பார்வையிடுவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும்.

விருச்சிகம்
இரண்டாம் வீடு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். எப்பவுமே குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமரும் போது அந்த குடும்பத்தை சுபிட்சமடையச் செய்வார். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். நிறைய பண வரவு வரும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் மேன்மையடையும். சுப நிகழ்ச்சிகள், திருமணம் நடைபெறும். குழந்தைகள் கல்வியில் மேன்மையடைவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் தொழில் வருமானம் பெருகும், புதிய வேலை கிடைக்கும். நோய்கள் குணமடையும். ஆபத்துகள் விலகும் இதுநாள்வரை பட்ட அவமானங்கள் தீரும் காலம் வந்து விட்டது.

கும்பம்
இது நாள் வரை தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். லாப குரு செய்யும் தொழிலில் லாபங்களை அள்ளித்தருவார். இதுநாள் வரை பொன் பொருட்களை சேர்க்காதவர்கள் கூட லாபகரமான வசதி வாய்ப்புகளை தருவார். உங்களுக்கு யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் வரப்போகும் யோகங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள் கும்ப ராசிக்காரர்களே. உங்க ராசிக்கு முன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை குரு பார்ப்பதால் திருமண யோகம் கைகூடி வருகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











