For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்

குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும

|

குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை குரு பெயர்ச்சி அவரது ராசியான தனுசுவில் ஆட்சி பெற்று அமர்வதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் லக்னகாரர்களுக்கும் நன்மைதான் நடக்கப்போகிறது.

குருபெயர்ச்சி அக்டோபர் இறுதியில் நடைபெறப்போகிறது. குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுவில் அமரப்போகிறார். தனுசு குருபகவான் ஆட்சி வீடு. இது ராசி சக்கரத்திற்கு ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தான வீடு. தனது ஐந்தாம் பார்வையால் மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுனம் ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்மம் ராசியை பார்க்கிறார்.

Guru Peyarchi for Mesha lagna

குரு பகவான் சந்திரன் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார். சனியின் வீடான மகரத்தில் நீசமடைகிறார். தனுசு, மீனம் ராசியில் ஆட்சி பெறுகிறார்.
இந்த முறை ஆட்சி பெற்று அமரும் குருபகவானால் மேஷ லக்னகாரர்கள் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அடையப்போகும் பலன்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்ய குரு

பாக்ய குரு

உங்க லக்னத்திற்கு எட்டாவது வீட்டில் அஸ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்ய ஸ்தானத்தில் பலமாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். தனுசு லக்னம் மூலம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் மேஷம் லக்னம் அஸ்வினியில் அமையப்பெற்றவர்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது.

அஸ்வினி அற்புதம்

அஸ்வினி அற்புதம்

குருபகவான் தனது பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் லக்னங்களைப் பார்வையிடுகிறார். உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், தைரியம் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் அற்புதங்கள் நடக்கப் போகிறது.

யோகம் தரும் குரு பெயர்ச்சி

யோகம் தரும் குரு பெயர்ச்சி

குரு பகவான் ஒன்பதாவது வீட்டில் பத்தாவது வீட்டு அதிபதியான சனியோடு சேர்ந்து அமர்வது மேஷம் லக்னகாரர்களுக்கு தர்மகர்மாதி யோகத்தை தரப்போகிறார். உங்களின் வீடு சந்தோஷங்களினால் நிறையப்போகிறது. சுபகாரியங்கள் அதிகம் நடக்கப் போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும்.

காதல் திருமணம் நடக்கும்

காதல் திருமணம் நடக்கும்

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இணைந்து ஒன்பதாம் வீட்டில் இணைவது நல்ல யோகம். குருபாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து பார்ப்பதால் பரணி நட்சத்திரத்தில் அமர்ந்த மேஷ லக்னகாரர்களை பார்ப்பது சிறப்பு. குரு ஒன்பதில் அமர்ந்து சுக்கிரன் நட்சத்திரமான பரணியை பார்ப்பதால் புகழ் செல்வம் செல்வாக்கு உயரும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

குரு ஆண் கிரகம், மேஷம் ஆண் ராசி கார்த்திகை சூரியனுக்கு உரிய ஆண் நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தில் அமர்ந்த மேஷ லக்னகாரர்களை குரு பார்வையிடுவதால் அம்சமான வாரிசுகள் பிறக்கும். புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும் யோகம் உள்ளது. மேஷ லக்னகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த குரு பெயர்ச்சி அற்புதமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guru peyarchi 2019: Guru Peyarchi for Mesha lagna Aries ascendant

Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. here is the prediction for Mesha lagna Aries ascendant
Story first published: Wednesday, September 11, 2019, 12:51 [IST]
Desktop Bottom Promotion