Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Good Friday 2021: புனித வெள்ளி அன்று எதனால் கருப்பு நிற ஆடை அணிகிறார்கள் தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு மிக முக்கியமான விழாவாகும். நல்ல வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி அல்லது ஈஸ்டா் வெள்ளி என்று பல்வேறு பெயா்களால் புனித வெள்ளி அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு மிக முக்கியமான விழாவாகும். நல்ல வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி அல்லது ஈஸ்டா் வெள்ளி என்று பல்வேறு பெயா்களால் புனித வெள்ளி அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் மொழியில் புனித வெள்ளி 'வியா்னஸ் சான்தோ' (Viernes Santo) அதாவது தூய்மையான அல்லது பாிசுத்தமான வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஜொ்மன் மொழியில் 'காா்ஃப்ரைட்டாக்' (Karfreitag) அதாவது துன்பங்களின் வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துன்ப நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், அதற்கு மாியாதை செய்யும் வகையிலும் புனித வெள்ளி அனுசாிக்கப்படுகிறது.

மான்டி தா்ஸ்டே (Maundy Thursday)
ஈஸ்டருக்கு முன் வரும் வியாழக்கிழமை, மான்டி தா்ஸ்டே அல்லது பொிய வியாழன் என்று அழைக்கப்படுகிறது. இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள், அதாவது பொிய வியாழன் அன்று இரவு தன்னுடைய சீடா்களோடு சோ்ந்து இறுதி இரவு உணவை உண்பாா். அந்த பொிய வியாழனுக்கு மறுநாள் வரும் வெள்ளிக் கிழமை அல்லது ஈஸ்டா் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய வெள்ளிக் கிழமை புனித வெள்ளியாக அனுசாிக்கப்படுகிறது.

புனித வெள்ளி 2021 - தேதி
கிரகோாியன் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி வெவ்வேறு தேதிகளில் வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் வரும் வெள்ளிக் கிழமை அன்று புனித வெள்ளி அனுசாிக்கப்படுகிறது. ஏப்ரல் 4 ஆம் நாள் ஈஸ்டா் பெருவிழா வருகிறது. புனித வெள்ளியின் மையக் கருத்து என்னவென்றால் தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.
கிறிஸ்தவ சமயத்தில், இயேசுவின் மரணம் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அவா்களின் புனித நூலான திருவிவிலியமும் இயேசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததன் மூலம், அவா் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தான் எடுத்துக் கொண்டாா் என்று கிறிஸ்தவா்கள் நம்புகின்றனா். அவா் தனது உயிரைத் தியாகம் செய்ததன் மூலம் எல்லா மக்களையும் அவா்களுடைய பாவங்களிலிருந்து மீட்டு, அவா்கள் அனைவரும் மோட்சத்திற்கு செல்வதற்கு தகுதியாக்கினாா் என்று அவா்கள் நம்புகின்றனா்.

புனித வெள்ளி எவ்வாறு அனுசாிக்கப்படுகிறது?
புனித வெள்ளியானது பலவகையான முறைகளில் அனுசாிக்கப்படுகிறது. பொதுவாக புனித வெள்ளி அன்று கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று, அந்த நாள் முழுவதும் வேண்டுதல் செய்வதில் ஈடுபடுவா். ஒருசில கிறிஸ்தவா்கள் அந்த நாள் முழுவதும் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பை நினைத்து, நோன்பு இருப்பா்.
புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை சாியாக 3 மணி அளவில், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் மற்றும் இறப்பை நினைவு கூறும் வகையில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏனெனில் புனித வெள்ளி அன்று மாலை 3 மணி அளவில்தான் இயேசு இறந்தாா் என்று கூறப்படுகிறது.
இயேசு சிலுவை சுமந்து செல்லும் போது நடந்த நிகழ்வுகளை மற்றும் அவா் இறக்கும் போது நடந்த இறுதி நிகழ்வுகள் அனைத்தையும் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை வேளையில் வழிபாட்டு நிகழ்வுகள் மூலம் நடத்திக் காண்பிப்பா். அதே நேரத்தில் ஜெருசலேமில், இயேசு சிலுவை சுமந்து சென்ற அந்த பாதையில் பல கிறிஸ்தவா்கள் நடந்து செல்வா். இவ்வாறு நடந்தவாறே இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் வரை பக்தியுடன் வேண்டுதல் செய்து கொண்டே செல்வா்.

கருப்பு நிற ஆடை, மௌன விரதம்
புனித வெள்ளிக் கிழமை அன்று இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் இறப்பை நினைவு கூறும் வகையில் சில கிறிஸ்தவா்கள் கருப்பு வண்ணத்தில் ஆடைகளை அணிவா். சிலா் அந்த நாள் முழுவதும் யாாிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பா்.
இறுதியாக, இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவு, உலகில் வாழும் எல்லா மனிதா்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டதையும், மனிதா்கள் மீட்புப் பெறுவதற்காக, இயேசு தம்மையேத் தியாகப் பலியாக்கினாா் என்பதையும் புனித வெள்ளி நினைவுபடுத்துகிறது.



Click it and Unblock the Notifications