Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
லட்சுமி தேவி உங்க வீட்டிற்கு வரப் போறாங்கன்னா இந்த அறிகுறி எல்லாம் முன்னாடி தெரியுமாம்..!
தான் நாம் ஒவ்வொருவரும் லட்சுமி தேவியை மகிழ்விக்க தங்களால் முடிந்ததை செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்து வீட்டிற்கு வருவதற்கு முன் ஒருசில அறிகுறிகளை அவர் வெளிக்காட்டுவார்.
இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. தெய்வங்களில் செல்வத்தின் அதிபதியாக கூறப்படும் லட்சுமி தேவியின் அருளைப் பெற ஒவ்வொருவருமே தங்கள் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு வருவோம். புராணங்களின் படி, லட்சுமி தேவி மூம்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவை திருமணம் செய்துள்ளார். லட்சுமி தேவியின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும். நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், லட்சுமி தேவியின் அருள் இருந்தால் தான் அந்த செல்வம் நம் கையில் நிலைத்திருக்கும்.

ஆகவே தான் நாம் ஒவ்வொருவரும் லட்சுமி தேவியை மகிழ்விக்க தங்களால் முடிந்ததை செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்து வீட்டிற்கு வருவதற்கு முன் ஒருசில அறிகுறிகளை அவர் வெளிக்காட்டுவார். அந்த அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்று அர்த்தம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

அதிகாலையில் துடைப்பத்தைப் பார்ப்பது
நம்பிக்கைகளின் படி, துடைப்பம் லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே ஒருவர் காலையில் எழுந்ததும் துடைப்பத்தைப் பார்த்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. குறிப்பாக இது ஒருவரின் வாழ்க்கையில் பண மழை பொழியப் போகிறது என்பதன் அடையாளம். அதோடு அனைத்து வகையான ஆடம்பர வசதிகளையும் பெறவுள்ளதையும் இது குறிக்கிறது.

துளசி செடிக்கு அருகில் பல்லியை காண்பது
துளசி செடிக்கு அருகில் பல்லி நடமாடுவதை நீங்கள் கண்டால், அதுவும் ஒரு நல்ல அறிகுறியாகும். இதனால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அதுமட்டுமின்றி, காலையில் வேலைக்கு செல்லும் போது சங்கு சப்தம் கேட்டால், லட்சுமி தேவியின் ஆசி கிடைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

லட்சுமி தேவியுடன் தொடர்புடையவை கனவில் வருவது
இரவு தூங்கும் போது ஒருவர் தனது கனவில் துடைப்பம், கலசம், ஆந்தை, சங்கு, யானை, பாம்பு, ரோஜாப் பூ போன்றவற்றைக் கண்டால், அது லட்சுமி தேவியின் அருளால் செல்வ செழிப்பு மற்றும் வாழ்வில் வளம் பெருகும் என்பதற்கான அடையாளமாகும்.

பறவையின் கூடு
உங்கள் வீட்டுச் சுவர்கள் அல்லது கூரையின் மூலையில் பறவை கூடு கட்டியிருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இதனால் ஒருவரின் அனைத்து பணிகளும் விரைவாகவும், எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாகவும் முடிவடைந்து, மகத்தான செல்வத்தைப் பெறுவார்.

மூன்று பல்லிகளை ஒன்றாக காண்பது
வீட்டில் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பல்லிகளை பார்த்தால், லட்சுமி தேவி விரைவில் உங்களுக்கு சிறப்பான ஆசியை வழங்கப் போகிறார் என்று அர்த்தம். இதன் விளைவாக திடீரென்று பல இடங்களில் இருந்து பணம் வர ஆரம்பித்து, கையில் பணம் அதிகம் சேரும்.



Click it and Unblock the Notifications
