Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்...
ஜோதிடத்தில் ஒரு சில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெண்கள் அதிர்ஷ்டமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள்.
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்த மாற்றம் எந்த வகையிலும் ஏற்படலாம். அதில் பள்ளி முடிந்து, கல்லூரிக்கு செல்லும் போது ஏற்படும், வேலைக்கு செல்லும் போது ஏற்படும், சிலருக்கு திருமணத்திற்கு பின் பெரிய மாற்றம் ஏற்படலாம். இதில் திருமணத்திற்கு பின் பலர் எதிர்பாராத முன்னேற்றங்களைக் கண்டிருப்பார்கள். இப்படி முன்னேற்றம் காண்பதற்கு அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவர் ஓர் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

ஜோதிடத்தின் படி, திருமணத்திற்கு பின் சில ஆண்கள் பெரிய முன்னற்றத்தைக் கண்டிருந்தால், அதற்கு அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாய் வந்துள்ள பெண்ணின் அதிர்ஷ்டம் ஓர் காரணமாகும். ஜோதிடத்தில் ஒரு சில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெண்கள் அதிர்ஷ்டமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இப்போது எந்த எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் காண்போம்.

D என்ற எழுத்து
ஜோதிடத்தின் படி, D என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் மகிழ்ச்சியாகவும் நட்புடனும் இருப்பார்கள். இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். இவர்கள் லட்சுமி தேவியின் அபரிமிதமான அருளைப் பெற்றவர்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள், கடின உழைப்பால் வாழ்வில் மிக வேகமாக வெற்றி பெறுவார்கள். மேலும் இந்த பெண்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் வசதியையும் பேரின்பமாக கருதக்கூடியவர்கள். கடின உழைப்பாளிகள் என்பதால் அதிக பணம் மற்றும் மரியாதையை சம்பாதிப்பார்கள். மறுபுறம், இவர்களின் நட்பான குணத்தால், மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். இதனால் ஆண்கள் இந்த பெண்களால் எளிதில் ஈர்க்கப்பட்டு, அவர்கள் மீது பைத்தியமாவார்கள்.

G என்ற எழுத்து
G என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்டமானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் புத்திசாலி, கடின உழைப்பாளி மற்றும் மகிழ்ச்சியானவர்கள். இம்மாதிரியான சூழ்நிலையில், இவர்களின் கடின உழைப்பு இவர்களை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண வைக்கிறது. மேலும் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதால், நிறைய சம்பாதிப்பார்கள். அதனால் இவர்களுக்கு பண பற்றாக்குறையே இருக்காது. ஜோதிடத்தின் படி, இந்த வகை பெண்களைப் பெறும் மாமியார்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்கள் விரைவில் மாமியாரின் இதயங்களை வெல்வார்கள். மேலும் இந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு பணத்துக்கோ, வேறு எதற்கோ பஞ்சம் இருக்காது.

V என்ற எழுத்து
V என்ற எழுத்தில் தொடங்கும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த பெண்கள் திறந்த மனதுடன் இருப்பதோடு, பொறுமையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளி. இவர்கள் தங்களின் ஒவ்வொரு செயலையும் மனதார விரும்பி செய்வதால், வெற்றி பெறுகிறார்கள். இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த பெண்கள் தாங்கள் செல்லும் வீட்டில் மகிழ்ச்சியை பரப்புவார்கள்.

J என்ற எழுத்து
J என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் யாருடனும் விரைவில் பழகக்கூடியவர்கள். இந்த எழுத்தில் தொடங்கும் பெண்ணைப் பெறும் மாமியார்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும் இந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களிடம் பணத்துக்கோ, உணவுக்கோ பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

S என்ற எழுத்து
S என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் தங்கள் கணவரை அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள். அதே வேளையில், இந்த பெண்கள் தங்களின் மாமியார் மீதும் மிகுந்த மரியாதையைக் கொண்டிருப்பார்கள். பொதுவாக இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

L என்ற எழுத்து
L என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்களும் தங்கள் கணவர் மற்றும் மாமியார்களுக்கு அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எப்போதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பார்கள். ஆகவே இந்த பெண்கள் செல்லும் வீடு எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

P என்ற எழுத்து
P என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையையும், வீட்டையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஜோதிடத்தில், இந்த எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமின்றி, மாமியார்களுக்கும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
