Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
வைரலாகும் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமண புகைப்படம்... இவங்க யார் தெரியுமா?
காதல் அதிகமாகி திருமணம் செய்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது பற்றி அந்த தொகுப்பில் பார்க்கலாம்.
'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்பது குறள். அன்பு பகிர்தலை பாலின வேறுபாடு கூட தடுக்க இயலாது என்று அமெரிக்காவில் இருவர் நிரூபித்துள்ளனர்.

அமித் ஷா மற்றும் ஆதித்யா மடிராஜூ ஆகிய இருவரும் சமுதாயத்தின் அத்தனை தடைகளையும் தாண்டி திருமண வாழ்வில் சேர்வது என்பதில் உறுதியாய் இருந்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவர்களது திருமண புகைப்படங்களுக்கு அநேகர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
நியூ ஜெர்ஸி ஜோடி
அமித் ஷாவும் ஆதித்யா மடிராஜூயும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வருகின்றனர். அமித், ஸ்பிரிட் என்ற நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆதித்யா, பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2016ம் ஆண்டு இருவரும் ஒருவர்பால் மற்றவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலிருந்து இருவரும் இணைந்தே இருக்கின்றனர். ஆனாலும் நியூ ஜெர்ஸியில் ராபின்ஸ்வில்லேயிலுள்ள பிஏபிஎஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திரில் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணத்தில் இணைய முடிவு செய்தனர். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை காணும் அனைவருமே இவர்களது கனவு காதலை உணர்ந்து கொள்ள இயலும்.
டேட்டிங்
"நாங்கள் டேட்டிங் செய்த முதலாம் ஆண்டில் எங்கள் விருப்பங்களை முற்றிலும் எதிரானதாக மாற்றி தனிப்பட்ட முறையில் சோதனை செய்து பார்த்தோம். ஆனாலும் காதலை வெளிப்படுத்தும் சுதந்திரம் வேண்டும் என்பது எங்கள் இருவரின் விருப்பமாக இருந்தது" என்று நன்றி தெரிவிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில் ஆதித்யா எழுதியுள்ளார்.
உரையாடல் தொடரட்டும்
"கடந்த சில நாள்கள் எனக்கும் ஆதித்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் தனித்தனியாக பதில் கூற இயலாவிட்டாலும் உங்கள் ஆதரவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள இந்த தருணத்தில் ஒருபாலின திருமணத்தை பற்றிய உங்கள் பார்வை மற்றவர்களுடன் ஒத்துப்போகாதிருந்தாலும், அதைக் குறித்த விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும்.
ஒருவருக்கு தெரியாத ஒன்றைப் பற்றி மனதை திறந்து அறிந்துகொள்ள சற்று காலமும் பொறுமையும் தேவைப்படும். கோபமோ, விரக்தியோ விழிப்புணர்வை ஏற்படுத்தாது. இனம், பாலினம், மதம், முன்னுரிமை ஆகியவற்றை காட்டிலும் காதல் வலிமையானது என்பதை அதுபோன்றவர்கள் உணரவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு தாருங்கள். உரையாடல் தொடரட்டும்" என்று தங்கள் புகைப்படம் ஒன்றின் கீழ் அமித் எழுதியுள்ளார்.

காக்டைல் பார்ட்டி
தங்கள் திருமணத்தின்போது இருவரும் அனிட்டா டாங்கிரி நிறுவன தயாரிப்பான ஆடைகளை அணிந்திருந்தனர். திருமணத்தை தொடர்ந்து நடந்த கலக்கல் விருந்தில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர்.



Click it and Unblock the Notifications
