Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப கருட பஞ்சமி அன்று இத செய்யுங்க...
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த கருட பஞ்சமி நாளானது தோஷங்களை போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள உகந்த நாள்.

புராணங்களின் படி, கருடன் ஒருவரை அனைத்து வகையான நாக தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் சக்தியைக் கொண்டவர். எனவே கருட பஞ்சமி அன்று கருடணை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது. அதுவும் இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால், கருடனின் அருள் கிடைக்கும்.

கருட காயத்ரி மந்திரம்
கம்! கணபதயே! நமஹ!
ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா!
ஓம்! ஹாம்! ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ!
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட பிரச்சோதயாத்

கருட மந்திரம் சொல்வதால் பெறும் பலன்கள்
இந்த கருட மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். இந்த கருட மந்திரத்தை ஒருவர் சுக்ல பக்ஷத்தின் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி, தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால், அந்நபர் 12 தலைமுறைக்கான சித்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் அனைத்து வகையான நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபட்டு, நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் ஆகியவற்றை பெறலாம்.

பிற நன்மைகள்
கருடனை வணங்குவதன் மூலம் பின்வரும் நன்மைகளும் கிடைக்கும். அவையாவன:
* பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களின் பயம் நீங்கும்.
* கண் திருஷ்டி, சூனியம் மற்றும் பிற எதிர்மறை ஆற்றலை நீக்கும்.
* சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
* கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள்.
* புகழ், பெயர் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
* தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
* பாம்புகள் பற்றிய பயம் நீங்கும்.
* வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிப்பதற்கான திறன் கிடைக்கும்.

கருட பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது?
கருடனுக்கும் அவரது தாயாரான வினிதாவுக்கும் இடையே உள்ள முடிவில்லாத பிணைப்பைக் காட்ட கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. தாய் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே இந்நாளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க கருடனை வழிபடுவார்கள்.
சாஸ்திரங்களின் படி, கருடனின் அருளைப் பெற்றவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது உறுதி. மேலும் அவர் வல்லமையும், வலிமையும் உடையவர். அதோடு கருடன் விஷ்ணுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். விஷ்ணு பகவானின் பக்தர்கள் அனைவருமே கருடனை தவறாது வணங்குவார்கள். இத்தகைய கருடன் 8 விதமான சித்திகளை அருளக்கூடியவர். அதோடு இவர் விஷ்ணுவின் மங்களகரமான 6 குணங்களையும் கொண்டவர்.



Click it and Unblock the Notifications