For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று விநாயகருக்கு ராசிக்கேற்ப பொருட்களை கொடுத்தா செல்வம் சேருமாம்.. உங்க ராசிக்கு என்ன தரணும்?

ராசிக்கு ஏற்ப பொருட்கள் விநாயகருக்கு படைத்து வணங்கினால் செல்வமும் வெற்றியும் சேருமாம். சரி, ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் விநாயகருக்கு எந்த பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

|

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விநாயகர் பிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த தினம் தான் விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பத்து நாட்கள் வரை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டிற்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து, அழகாக அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்த உணவுகளைப் படைத்து விநாயகரை மிகவும் சிறப்பாக உபசரிப்பார்கள்.

Ganesh Chaturthi: Offer These Things To Ganesha According To Your Zodiac Sign

முக்கியமாக இந்நாட்களில் விநாயகருக்கு பலவற்றை வழங்குவார்கள். அதுவும் ஒருவரது ராசிக்கு தகுந்தவாறு விநாயகருக்கு படையலைப் படைப்பதன் மூலம் ஒருவர் சுப பலன்களைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ராசிக்கு ஏற்ப பொருட்கள் விநாயகருக்கு படைத்து வணங்கினால் செல்வமும் வெற்றியும் சேருமாம். சரி, ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் விநாயகருக்கு எந்த பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

MOST READ: விநாயகர் சதுர்த்தி அன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது? ஒருவேளை பார்த்துவிட்டால் என்ன செய்யணும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு லட்டு மற்றும் வெல்லத்தை வழங்குவது நல்லது. இதனால் விநாயகரின் அருளைப் பெறுவதோடு, செல்வமும் பெருகும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சர்க்கரை மிட்டாய் அல்லது தேங்காயால் செய்யப்பட்ட லட்டுக்களை படைப்பது மிகவும் நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பாசிப்பருப்பால் ஆன மூங்தால் லட்டுக்களை விநாயகருக்கு படைத்து வணங்கினால், விநாயகரின் ஆசியைப் பெறலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் விநாயகர் பிறந்த நாளன்று அவருக்கு பாயாசம், மோர் அல்லது மோதகத்தைப் படைப்பது நல்லது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் முழுமுதற் கடவுளான விநாயகரின் ஆசியைப் பெற, வெல்லத்தால் ஆன மோதகத்தை படையுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயகரை மகிழ்விக்க பச்சை நிற பழங்கள் மற்றும் உலர் திராட்சையை வழங்குவது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிஸ்ரி, லட்டு மற்றும் வாழைப்பழங்களை வழங்கினால் விநாயகரின் முழு அருளையும் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு வெல்லத்தால் ஆன லட்டுக்களை செய்து படைத்து வணங்குவது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயகர் பிறந்த பிள்ளையார் சதுர்த்தி அன்று மோதகம் மற்றும் வாழைப்பழங்களை வழங்கினால், விநாயக பெருமானின் அருளைப் பெறலாம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் முதன்மைக் கடவுளான விநாயகருக்கு எள்ளு லட்டுக்களை வழங்கி வணங்குவது விநாயகரின் அருளால் அனைத்து வளங்களையும் பெற உதவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு வெல்லத்தால் செய்யப்பட்ட லட்டுக்களை செய்து படைத்து வணங்குவது நல்லது.

மீனம்

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள், கடலை மாவால் ஆன லட்டு, வாழைப்பழம் மற்றும் பாதாமை வழங்கினால், கணபதியான விநாயகரின் முழு அருளையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi: Offer These Things To Ganesha According To Your Zodiac Sign

Various things are offered to Lord Ganesha on Ganesh Chaturthi. It is believed that by offering bhog according to your zodiac sign, one gets auspicious results.
Desktop Bottom Promotion