Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
மீன ராசியில் உருவாகியுள்ள கஜகேசரி ராஜ யோகத்தால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
கஜகேசரி யோகம் உருவாகும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல பணமும், தொழிலில் நல்ல வளர்ச்சி மற்றும் வெற்றி கிடைக்கும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அல்லது சேர்க்கை மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மீன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். செப்டம்பர் 11 ஆம் தேதி சந்திரன் மீன ராசியில் சஞ்சரித்தார். குருவும், சந்திரனும் இணையும் போது கஜகேசரி ராஜ யோகம் உருவாகிறது. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். கஜகேசரி யோகம் உருவாகும் காலத்தில் யானையைப் போன்று பலசாலிகளாகவும், சிங்கத்தைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாகவும் இருப்பர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கஜகேசரி யோகம் உருவாகும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல பணமும், தொழிலில் நல்ல வளர்ச்சி மற்றும் வெற்றி கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
கஜகேசரி ராஜ யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இந்த வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்கால கட்டத்தில் புதிய ஆதாரங்களில் இருந்து நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இதனால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
கஜகேசரி யோகத்தினால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். ஏனெனில் இந்த ராஜயோகமானது 9 ஆவது வீட்டில் உருவாகிறது இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைத்தால், அதற்கு இக்காலத்தில் முயற்சிப்பது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். மன பதற்றம் நீங்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.

விருச்சிகம்
கஜகேசரி ராஜ யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் 5 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்த பணத்தை இக்காலத்தில் திரும்ப பெறுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். மார்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நற்பலனைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications
