Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கஜகேசரி யோகத்தில் வரும் சனி பிரதோஷம்: இந்த 3 ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகுது...
நவம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையான நவம்பர் 5 ஆம் தேதி பிரதோஷம் வருகிறது. அதே வேளையில் இந்நாளில் தான் கஜகேசரி யோகமும் உருவாகிறது.
நவம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையான நவம்பர் 5 ஆம் தேதி பிரதோஷம் வருகிறது. அதே வேளையில் இந்நாளில் தான் கஜகேசரி யோகமும் உருவாகிறது. எனவே ஜோதிடத்தின் படி, இந்த சனிக்கிழமை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த நாளில் சனி பகவானை வழிபட்டால், சனி பகவானின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணித்து வருகிறார். இதனால் பல ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளை பெறுகிறார்கள். இருப்பினும் சில ராசிக்காரர்கள் சனியின் இந்த மாற்றத்தால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் சனி பிரதோஷத்தில் சிவ பெருமானுடன், சனி பகவானை வழிபட்டால், தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

கஜகேசரி யோகம் எப்படி உருவாகிறது?
வேத ஜோதிடத்தில், கஜகேசரி யோகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த யோகமாகும். இந்த யோகமானது குருவும், சந்திரனும் ஒரே ராசியில் இணையும் போது உருவாகிறது. ஜோதிடத்தின் படி, சந்திரன் நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை மீன ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே இந்த மீன ராசியில் குரு பயணித்து வருகிறது. எனவே இந்த சனிக்கிழமையில் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தில் தான் சனி பிரதோஷமும் வருகிறது. எனவே இந்த சனி பிரதோஷத்தின் போது விரதத்தை மேற்கொண்டால், பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

கும்பம் மற்றும் மகரம்
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவான். ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. எனவே கஜகேசரி யோகம் உருவாகும் இந்த சனிக்கிழமையில் இவ்விரு ராசிக்காரர்களும் விரதமிருந்து சனிபகவானை வழிபட்டால், சனி பகவானின் அருளால் ஏராளமான நற்பலனைப் பெறலாம்.

மீனம்
மீன ராசியில் கஜகேசரி யோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்களும் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியுடன், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சனிபகவானை எவ்வாறு வழிபட வேண்டும்?
வருகிற சனி பிரதோஷ தினத்தில், அதிகாலையில் எழுந்து குளித்து, சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடுங்கள். சனி பகவானுக்குரிய மந்திரங்கள் மற்றும் சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். சனி பகவானுக்கு பிடித்த கடுகு எண்ணெயால் தீபம் ஏற்றி, கருப்பு எள்ளை தானம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
சனிக்கிழமைகளில் தற்பெருமை காட்டாமல் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் அவமதித்துவிடாதீர்கள். யாருக்கும் எவ்வித தீங்கையும் செய்துவிடாதீர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் மற்றும் தான தர்மம் செய்யுங்கள். இதனால் சனி பகவானை குளிர்வித்து, அவரின் கோபத்தைக் குறைத்து பரிபூர்ண அருளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications